பக்கம் எண் :

பக்கம் எண் :105

::TVU::
7. துயிலெழுப்பிய காதை






105






110





115





120





125





130



மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்
காராளர் சண்பையிற் கௌசிகன் மகளே
மாருத வேகனோ டிந்நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை யாகிய சுதமதி கேளாய்

இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்துத்
தன்பிறப் பதனோடு நின்பிறப் புணர்ந்தீங்கு
இலக்குமி யாகிய நினக்கிளை யாள்வரும்
அஞ்சலென் றுரைத்த தவ்வுரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேரிழை நல்லாள்

காவ லாளர் கண்டுயில் கொள்ளத்
தூமென் சேக்கைத் துயில்கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்பப்
புலம்புரிச் சங்கம் பொருளோடு முழங்கப்
புகர்முக வாரணம் நெடுங்க விளிப்பப்

பொறிமயிர் வாரணங் குறுங்கூ. விளிப்பப்
பணைநிலைப் புரவி பலவெழுந் தாலப்
பணைநிலைப் புள்ளும் பலவெழுந் தாலப்
பூம்பொழி லார்கைப் புள்ளொலி சிறப்பப்
பூங்கொடி யார்கைப் புள்ளொலி சிறப்பப்

கடவுட் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
கலம்பகர் பீடிகைப் பூப்பலி கடைகொளக்
குயிலுவர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்தெழ
ஊர்துயி லெடுப்ப உரவுநீ ரழுவத்துக்

காரிருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும்
ஏவுறு மஞ்ஞையின் நினைந்தடி வருந்த
மாநகர் வீதி மருங்கிற் போகிப்
போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம்
மாதவி தனக்கு வழுவின் றுரைத்தலும்

நன்மணி இழந்த நாகம் போன்றவன்
தனமகன் வாராத் தனித்துய ருழப்ப
இன்னுயி ரிழந்த யாக்கையி லிருந்தனள்
துன்னிய துரைத்த சுதமதி தானென்.