7--14,
மன்னவன்
மகனே-அரசன் புதல்வனே, கோல் நிலை திரிந்தி டின் கோள் நிலை
திரியும்-அரசனது கோல் கோடுவதாயின் கோட் களின் நிலை வேறுபடும்,
கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும்- அங்ஙனம் கோட்கள்
நிலை தவறினால் மழை பொய்யாமற் கழியுங்காலம் மிகும், மாரி வறங்
கூரின் மன்னுயிர் இல்லை - மழை வளங் குறைந்தால் நிலைபெற்ற உயிர்கள்
இல்லையாம், மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்உயிர் என்னும்
தகுதி இன்று ஆகும்- நிலைபெற்ற உயிர்கள் அனைத்தும் மண்ணுலகத்தை
ஆள்கின்ற மன்னவனது உயிர்என்று கூறப்படும் தகைமைஇலதாம் ஆகலின்,
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த - தவத்தின் கூறுபாட்டினை
மேற்கொண்ட மணிமேகலைபால் வைத்த, அவத்திறம் ஒழி கென்று அவன்
வயின் உரைத்தபின்-தீய விருப்பின் தன்மையை ஒழிவாயாக என்று உதயகுமரனிடம்
மொழிந்த பின்னர் ;
கோல்நிலை திரியின்
கொள்நிலை திரிதல் முதலியன நிகழுமென் பதனை, 1"கோணிலை
திரியாக் கோலோ னாகுக,'' 2"கோணிலைதிரிந்து
நாழி குறைபடக் பகல்கண் மிஞ்சி, நீணில மாரி யின்றி விளைவஃகிப்
பசியு நீடிப், பூண்முலை மகளிர் பொற்பிற் கற்பழிந் தறங்கண் மாறி,
ஆணையிவ் வுலகு கேடா மரசுகோல் கோடி னென்றான்" என்பவற்றானும்
அறிக. அவத்திறம் - கேடு செய்யும் தீய விழைவு.
15--22.
உவவனம்
புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும்-உவவனத்திற் புகுந்து ஆண்டு மிகுந்த
உறக்கத்துடனிருக்கும், சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி - சுதமதியை
உறக்கத்தினின்றும் எழுப்பி, இந்திரகோடனை இந்நகர்க் காண வந்தேன்
அஞ்சல்