நேரிற் கூறுவதைப்போலக் கனவின்கண் மொழிந்தேன், ஈங்கு இவ்வண்ணம்
ஆங்கு அவட்கு உரை என்று - இவற்றையெல்லாம் மாதவிக்குக் கூறுவாயாக
என்றுரைத்து அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் - விசும்பில்
எழுந்து அவ்வரிய மணிமேகலா தெய்வம் போயின பின்னர் ;
|
ஏதம் இல் நெறி
எய்தியது என்றது புத்தன் அறவழிப்படுதல் என்க; இதனை விசுத்திமார்க்கம்
என்ப. தெய்வம்-என்குல முதல்வனைக் கேட்டினின்றும் நீக்கிப் பாதுகாத்த
தெய்வம் என விரித்துரைத்துக் கொள்க. கொடியிடை தன்னை-கொடி
யிடைக்கு; கொடியிடை: மணிமேகலை. நள்ளிருள் என்பது செறிந்த இருளையுடைய
இரவினை யுணர்த்திற்று. கடுநவை - அவா முதலியன. நன்னாள் நள்ளிருட்
கனவகத்து உரைத்தேன் என்க.
|
41 வெந்துயர்
எய்திச் சுதமதி எழுந்தாங்கு-சுதமதி கொடிய துன்ப மடைந்து எழுந்து
;
|
42--49. அகல்மனை
அரங்கத்து ஆசிரியர் தம்மொடு- அகன்ற வீடா கிய அரங்கின்கண்
ஆசிரியன்மாரொடு நின்று, வகை தெரி மாக் கட்கு வட்டணை காட்டி-அவினய
முதலிய கூறுபாடுகளையறிகின்ற மக்களுக்குக் கமலவர்த்தனை காட்டி, ஆடல்
புணர்க்கும் அரங்கியல் மகளிரில்-ஆடல்புரியும் நாடக மகளிரைப்போல,
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-ஒருங்கியைந்த குரல்யாழ் முதலிய
குயிலுவக் கருவிகளெல்லாம் கண்டுயின்று, பண்ணுக் கிளைபயிரும் பண்ணி
யாழ்த் தீந்தொடை-பண்ணின் வகைகளை இசைக்கும் யாழின் இனிய நரம்புகள்,
கொளைவல் ஆயமோடு இசை கூட்டுண்டு- பாட்டில் வல்ல மகளிருடன் இசையைச்
சேர்ந்தனுபவித்து, வளை சேர் செங்கை மெல்விரல் உதைத்த-வளைகளுடன்
கூடிய சிவந்த கைகளின் மெல்லிய விரல்களால் தெறித்த, வெம்மை
வெய்துறாது தன்மையில் திரியவும்- வெம்மை நன்கு உறாமையால் இயல்பி
னின்று திரியாநிற்கவும்;
|
ஆசிரியர்-இயலாசிரியன்,
ஆடலாசிரியன், யாழாசிரியன், இசையா சிரியன், குழலாசிரியன்,
தண்ணுமை யாசிரியன் என்போர். வட்டணை- வர்த்தனை; கமல. வர்த்தனை;
ஆவது கைத்தலங் காட்டல். கிளை-திறமு மாம். தீந்தொடை திரியவும்
என்க.
|
|
50--53. பண்பில்
காதலன் பரத்தமை நோனாது. குணமற்ற காதலனுடைய பரத்தமையைப் பொறாமல்,
உண் கண் சிவந்தாங்கு ஒல்கு கொடிபோன்று - அசைகின்ற கொடிபோல
மையுண்ட கண்கள் சிவந்து, தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்-தெளி
விக்கவும் தெளியாமல் ஊடலுடன் துயில்கின்ற மகளிர், விரைப் பூம்பள்ளி
வீழ்துணை தழுவவும் - மணம் பொருந்திய மலரணையில் தம்மால் விரும்பப்படுகின்ற
கொழுநரைத் தழுவவும் ;
|