பண்பு - ஈண்டு
அன்பு. பரத்தமை-பரத்தன் தன்மை;பரத்தையை மருவி யொழுகுவோன் பரத்தன்;
1
"பெண்ணியலா
ரெல்லாருங் கண்ணிற் பொதுவுண்பர், நண்ணேன் பரத்தநின் மார்பு"
என்பது காண்க. ஊடலொடு துயில்வோர் தாமே துணையைத் தழுவவு மென்க.
|
54--59. தளர்நடை
ஆயமொடு தங்காது ஓடி விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய்வருந்தி - தளர்நடைச்
சிறார்களுடன் ஓரிடத்தில் தங்காமல் ஓடி விளையாடுஞ் சிறு தேரினை
இழுத்து உடல்வருந்தி, அமளித் துஞ்சும்-படுக்கையில் உறங்குகின்ற,
ஜம்படைத் தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு -
ஜம்படைத் தாலி யணிந்த மார்பும் மழலைச் செவ்வாயும் தளர்நடையுமுடைய
இளம் புதல்வர்க்கு, காவற்பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித்
தூங்கு துயில் வதியவும் - செவிலித்தாயர் கடிப்பகை வீசிப் புகை
காட்டித் தூங்குகின்ற உறக்கத்திற் பொருந்தவும்;
|
ஐம்படை - திருமாலின்
பஞ்சாயுத வடிவமுடைய அணிகலன் ; "சிந்துபு சின்னீ ரைம்படை நனைப்ப"
(3; 138) என்புழி உரைத்தமை நோக்குக. கடிப்பகை - பேய்க்குப்
பகை ; வேம்பும், வெண்சிறு கடுகும்; இக் காதையுள் மேல்வருதல் காண்க.
காவற்பெண்டிர் துயில் வதியவும் என்க.
|
60--63. இறையுறை
புறவும் நிறைநீர்ப் புள்ளும் - இறப்புகளில் வாழ் கின்ற புறாக்களும்
நிறைந்த நீரிலுள்ள பறவைகளும், கா உறை பறவைகளும நா உள் அழுந்தி-பொழில்களில்
உறைகின்ற புட்களும் நா உள்ளே அழுந்தி, விழவுக்களி அடங்கி முழவுக்கண்
துயின்று- விழாவினாலுண்டாகிய களிப்பு அடங்கி முழவுகளின் கண் துயின்று,
பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள் - பழைய வலி யினையுடைய தொன்னகரம்
துயிலினைக்கொண்ட இடையா மத்தில்;
|
நாவுள்ளழுந்தலாவது
: ஒலியாதிருத்தல். அழுந்தி, அடங்கி, துயின்று என்னும் இடத்து நிகழ்பொருளின்
றொழில்கள் இடத்தின் மேல் நின்றன ; அழுந்தி முதலியவற்றைச்
செயவனெச்சமாகத் திரித்தலுமாம்.
|
64--65. கோமகன்
கோயில் குறுநீர்க் கன்னலின் - அரசன் மாளிகையில் குறிய நீரினைக்
கொண்ட நாழிகை வட்டிலால், யாமம் கொள்பவர் ஏத்துஒலி அரவமும்-நாழிகைக்
கணக்கிடுவோர் ஏத்துகின்ற ஒலியாகிய முழக்கமும்;
|
|
அரசனை ஏத்தி
நாழிகை கூறுவராகலின் ''ஏத்தொலியரவமும்'' என்றார். ஒலியாகிய அரவமென்க
; அரவம் தமிழ்ச்சொல்லே.
|