66--67. உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா
உயக்கத்து-தங்குமிடத்தில் நின்று ஒடுங்கிய உண்ணாமையா னுண்டாகிய
வருத்தத்தினால், நிறை அழியானை நெடுங்கூவிளியும் - நிறையழிந்த
யானையினது நெடிய கூப்பீடாகிய முழக்கமும் ;
|
68--69. தேர்வழங்கு தெருவும் சிற்றிடை
முடுக்கரும் - தேர்கள் செல்லுகின்ற பெரியவீதிகளிலும் சிறிய இடங்களையுடைய
முடுக் குத் தெருக்களிலும், ஊர்காப்பாளர் எறிதுடி ஓதையும் - ஊர்
காவலர் அடிக்கின்ற துடியொலியும் ;
|
70--72. முழங்கு நீர் முன்றுறைக் கலம்புணர்
கம்மியர் - ஒலிக்கின்ற நீரினையுடைய கடற்றுறைகளில் மரக்கலத்திற்
சேர்ந்து தொழில் புரிவோர், துழந்தடு கள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து
- துழாவிச் சமைத்த கள் வகைகளில் நெல்லாற் சமைத்த கள்ளையுண்டு
தம்மை மறந்து, பழஞ்செருக்குற்ற அனந்தர்ப் பாணியும் - பழைய செருக்கினையடைந்த
மயக்கத்துடன் பாடும் பாட்டினோசையும்;
|
|
கள்ளாகிய தோப்பி
யென்றுமாம். தோப்பி - நெல்லாற் சமைத்த கள். பழஞ்செருக்கு-முதிர்ந்த
களிப்பு. அனந்தர்-கள்ளுண்ட மயக்கம்.
|
|
73--76.அரவாய்க் கடிப்பகை ஐயவிக்
கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து-அரத்தின் வாய்போன்ற
வேம்பாகிய கடிப்பகையும் வெண்சிறுகடுகாகிய கடிப்பகையும் கலந்து
இடப்பட்டு மகளிரால் ஏந்தப்பட்ட புகையுடன் சென்று, புதல்வரைப்
பயந்த புனிறு தீர் கயக்கம் தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
- புதல்வரைப் பெற்ற புனிறு தீருமாறு கயங்குதல் தீர்க்கின்ற மகளிர்
குளங்களில் நீராடுகின்ற ஒலியும் ;
|
|
கடிப்பகை-பேய்க்குப்
பகையென்னும் பொருளது, மகளிர் ஏந்திய அரவாய்க் கடிப்பகையுடனும்
ஐயவிக் கடிப்பகை விரவிய தூமத் துடனும் என்றுரைத்தலுமாம். புனிறு
தீர்ந்த மகளிர் மயக்கந்தீர்ந்த மகளிர் எனத் தனித்தனி முடித்தலுமாம்.
புதல்வர்ப் பயந்த புனிறு தீர்ந்த மகளிர் இரவிற்சென்று குளத்தில்
நீராடுதல் 1"கணவ
ருவப்பப் புதல்வர்ப் பயந்து, பணைத்தேந் திளமுலை யமுதமூறப், புலவுப்புனிறு
தீர்ந்து பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீ ரயர" என்பதனாலும்
அறியப்படும். பத்தாவது இரவில் நீராடவேண்டும் என்பர்.
|
|
77--80. வலித்த நெஞ்சின் ஆடவர்
இன்றியும் - பகைமையைக் கருதிய உள்ளமுடைய வீரர் இல்லாதிருக்கவும்,
புலிக்கணத்து அன்னோர்-புலிக்கூட்டத்தினை யொத்த வீரர்கள்,
பூதசதுக்கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என-பூதத்தையுடைய
|