பக்கம் எண் :

பக்கம் எண் :111

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

நாற்சந்தியிலே கொடியணிந்த தேரினையுடைய எம் அரசன் வெற்றிபெறுக என்று, இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும் இடியனைய குரல் முழக்கத்துடன் பலியிடுகின்ற ஓசையும் ;

வலித்த-போரினைக் கருதிய என்றுமாம். ஆடவர்-ஈண்டுப்பகைவர்.

81--85.   ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் - ஈன்றணிமையை யுடைய இளமகளிர் ஆற்றாச் சிறுவர், கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் - முதற் சூலையுடைய மங்கையர் பெரிய புண்களால் வருந்தினோர், தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள் - ஆகிய இவர்களின் துன்பங்களை நீக்குகின்ற மந்திரவாதிகள், மன்றப் பேய் மகள் வந்து கைக்கொள்க என-மன்றத்தின்கணுள்ள பேய்மகள் வந்து பெறுக என்றுகூறி, நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-நின்று பலி எறிகின்ற நீண்ட குரல் முழக்கமும் ;

கடுஞ்சூல் - முதற்சூல்; 1"கடுஞ்சூன் முண்டகம் கதிர்மணி கழாஅலவும்" என்றார் பிறரும். பலியிடும்பொழுது நெடுங்குர லெடுத்துக்கூப்பிடுவராகலின் ''பலியினெடுங்குரல்'' என்றார்:

86.   பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கிசைப்ப - ஆகிய பலவேறு வகைப்பட்ட ஓசையும் பரந்து ஒன்றாக
முழங்க;

87--93.   கேட்டு உளம் கலங்கி ஊட்டிருள் அழுவத்து-அவற்றை யெல்லாங் கேட்டு மனங்கலங்கி ஊட்டினாற்போன்ற இருட்பரப் பிலே, முருந்து ஏர் இளநகை நீங்கிப் பூம்பொழில் - மயிற்பீலியின் முளைபோன்ற அழகிய பற்களையுடைய சுதமதி உவவனத்தினின்றும் நீங்கி, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருந்திய மதிலின் மேற்றிசையிலுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதெய்வம் வியந்து எடுத்து உரைத்த-பெருமைபொருந்திய மணிமேகலாதெய்வம் வியந்து எடுத்துக்கூறிய, சக்கரவாளக் கோட்டத் தாங்கண் - சக்கரவாளக் கோட்டத்திண்கண், பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்-பலருஞ் செல்லுமாறு திறக்கப்பட்டிருக்கின்ற பெரிய வாய்போலும் வாயிலையுடைய, உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்-ஊரம்பலத்தில் ஒருபக்கத்தில் இருத்தலும்;

ஊட்டுதல் - பூசுதல். அறவி - அம்பலம் சுதமதி எழுந்து பல் வேறு ஓதையும் ஒருங்கிசைப்பக் கேட்டு உளங்கலங்கி நீங்கிப்போகி ஒருபுடை யிருத்தலும் என்க.

94--97.   கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய அந்தில் எழுதிய அற்புதப் பாவை - நெடிய தோற்றத்தையுடைய தூணாகிய அவ் விடத்தே பழவினையாகிய காரணத்தை அனைவருக்கும் அறிவிக்கும் பொருட்டு மயன் என்னும் தெய்வத் தச்சனால் எழுதப்பட்டு

1 சிறுபாண். 148.