பக்கம் எண் :

பக்கம் எண் :112

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

அனைவருக்கும் வியப்பை யுண்டுபண்ணும் பாவையானது, மைத்தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ-சுதமதி அஞ்சி மயங்குமாறு, திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின் - எதிர்காலத்தில் நிகழ் வனவற்றையும் கூறும் திப்பியமாகிய தெய்வக் கிளவியினாலே ;

நெடுநிலை யுடைக் கந்தாகிய அந்தில் எனக் கூட்டுக. அந்தில்-ஆங் கென்னும் பொருட்டு. காட்டிய : செய்யியவென்னும் வினையெச்சம். வருவதனை உரைப்பது தெய்வத் தன்மையாம் என்று கொண்டு ''திப்பிய முரைக்கும்'' என்றார். தெய்வக்கிளவி - தெய்வத்தின் மொழி.

98--105.   இரவிவன்மன் ஒரு பெருமகளே - அசோதர நகரத்தரசனாகிய இரவிவன்மனது ஒரு பெருமகளே, துரகத் தானைத் துச்சயன்தேவி - குதிரைச் சேனைகளை யுடையனும் கச்சய நகரத் தரசனுமாகிய துச்சயனுடைய மனைவியே, தயங்கு இணர்க்கோதை தாரை சாவுற-விளங்குகின்ற பூங்கொத்தினாலாய மாலையையுடைய தாரை இறக்குமாறு, மயங்கி யானைமுன் மன்னுயிர் நீத்தோய்- யானையின் முன்னே மயங்கி உயிர் துறந்தோய், காராளர் சண்பையில் கௌசிகன் மகளே - காராளருடைய சண்பை நகரத்தில் உள்ள கௌசிகன் என்பவனுடைய புதல்வியே, மாருதவேகனோடு இந்நகர் புகுந்து - மாருதவேகன் என்னும் விஞ்சையனுடன் இந் நகரத்திற் சேர்ந்து, தாரை தவ்வை தன்னொடு கூடிய - தமக்கை யாகிய தாரையுடன் கூடிய, வீரையாகிய சுதமதி கேளாய் - வீரை யாகிய சுதமதியே கேட்பாயாக ;

இரவின்மன் - சுதமதியின் முற்பிறப்பிலே தந்தையாயிருந்தவன். துச்சயன் - சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். தாரை- சுதமதியின் முற்பிறப்பின் தமக்கையாயிருந்தவள். வீரை யானையால் இறந்தது கேட்டு இவள் இறந்தமையால் ''தாரை சாவுற'' என்றாள் ; சாவுற : எதிர்காலத்தில் வந்தது. காராளர் - வேளாளர் ; சண்பை - சீகாழி ; சண்பை யென்பது அங்கநாட்டிற் கங்கைக் கரையிலுள்ளதாகிய சம்பா நகரம் என்றும், காராளர் என்பது கராளர் என்பதன் திரிபென்றும் கூறுவாருமுளர் ; தாரை, வீரை, இலக்குமி என்னும் மூன்று சகோதரிகளுள், தாரை மாதவியாகவும், இலக்குமி மணிமேகலை யாகவும் காவிரிப்பூம் பட்டினத்திற் பிறந்திருத்தலானும், இந்திரவிழாக் காண்டற்கு வந்த மாருதவேகன் என்னும் விஞ்சையன் தான் பூக் கொய்யும்பொழுது தன்னை எடுத்தேகினனென்று மேல் (3:28-39) சுதமதி கூறுதலானும் புகார் நகருக்கு அணித்தாகிய சீகாழியென்று கொள்வதே பொருத்தமாம். கௌசிகன் - சுதமதியின் தந்தை.

106--110.    இன்றேழ் நாளில் இடையிருள் யாமத்து - இற்றைக்கு ஏழாவது நாளில் இருளையுடைய இடையாமத்தில்தன் பிறப்பதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு இலக்குமியாகிய நினக்கு