முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :116
Untitled Document
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
20
25
30
35
40
45
50
நீல மாக்கடல் நெட்டிடை யன்றியுங்
காலை ஞாயிறு கதிர்விரித்து முளைப்ப
உவவன மருங்கினில் ஓரிடங் கொல்லிது
சுதமதி ஒளித்தாய் துயரஞ் செய்தனை
நனவோ கனவோ என்பதை அறியேன்
மனநடுக் குறூஉம் மாற்றந் தாராய்
வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்
எல்வளை வாராய் விட்டகன் றனையோ
விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள்
வஞ்சஞ் செய்தனள் கொல்லோ அறியேன்
ஒருதனி யஞ்சுவென் திருவே வாவெனத்
திரைதவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்
எழுந்துவீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும்
அன்னச் சேவல் அரச னாகப்
பன்னிறப் புள்ளினம் பரந்தொருங் கீண்டிப்
பாசறை மன்னர் பாடி போல
வீசுநீர்ப் பரப்பின் எதிரெதி ரிருக்கும்
துறையுந் துறைசூழ் நெடுமணற் குன்றமும்
யாங்கணுந் திரிவோள் பாங்கினங் காணாள்
குரற்றலைக் கூந்தல் குலைந்துபின் வீழ
அரற்றினள் கூஉய் அழுதனள் ஏங்கி
வீழ்துய ரெய்திய விழுமக் கிளவியில்
தாழ்துய ருறுவோள் தந்தையை உள்ளி
எம்மிதிற் படுத்தும் வெவ்வினை யுருப்பக்
கோற்றொடி மாதரொடு வேற்றுநா டடைந்து
வைவா ளுழந்த மணிப்பூண் அகலத்து
ஐயா வோவென் றழுவோள் முன்னர்
விரிந்திலங் கவிரொளி சிறந்துகதிர் பரப்பி
உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித்
திசைதொறும் ஒன்பான் முழநில மகன்று
விதிமா ணாடியின் வட்டங் குயின்று
பதும சதுர மீமிசை விளங்கி
அறவோற் கமைந்த ஆசன மென்றே
நறுமல ரல்லது பிறமரஞ் சொரியாது
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்