பக்கம் எண் :

பக்கம் எண் :118

::TVU::
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
 
அடைகரைக்கண் கழனியில் என்றுமாம். தொடுப்பு - விதைப்பு; 1"தொடுப்பி னாயிரம் வித்தியது விளைய" என்பது காண்க; விளாக் கொண்டு உழுதலுமாம். முரி என்பதற்குச் சிதறிய என்றும், ஒளிவிடு மென்றும் உரைத்தலுமாம். அறல் - நீர் அரித்து ஒழுகுவதால் மணல் அற்று அற்று இருப்பது. மணிபல்லவத்திடைப் பரப்பில் இலஞ்சிக் கரையில் மணலிற் பள்ளியில் துயிலெழுந்த மணிமேகலை யென்க.

13--27.காதற் சுற்றம் மறந்து கடைகொள வேறிடத்துப் பிறந்த உயிரே போன்று - அன்பின் மிக்க சுற்றங்களை மறந்து முடிவு கொள்ள வேறிடத்தில் தோன்றிய உயிரைப்போல, பண்டுஅறிகிளையொடு பதியும் காணாள்-முன்னர்த் தன்னாலறியப்பட்ட சுற்றத்துடன் நகரத்தையும் காணாதவளாகி, கண்டு அறியாதன கண்ணிற் காணா - முன் கண்டறியப் படாதனவற்றைக் கண்களாற் கண்டு, நீல மாக் கடல் நெட்டிடை அன்றியும் - நீலநிறமுடைய பெரிய கடலில் அணிமைக்கண், காலை ஞாயிறு கதிர் விரித்து முளைப்ப - இளஞாயிறு கதிர்களை விரித்து உதிக்க, உவவன மருங்கில் ஓரிடம் கொல் இது-இஃது உவவனத்தில் ஓரிடமோ, சுதமதி ஒளித்தாய்- சுதமதீ ஒளிந்து கொண்டாயோ, துயரம் செய்தனை - துன்பம் செய்தனை, நனவோ கனவோ என்பதை அறியேன்-இது நனவோ கனவோ என்பதை அறிகின்றிலேன், மனம் நடுங்குறூஉம் மாற்றம் தாராய்-உள்ளம் நடுங்குதலுறுகின்றது மறுமொழி தருவாய், வல்லிருள் கழிந்தது மாதவி மயங்கும்-வலிதாகிய இருள் நீங்கியது மாதவி மயங்குவாள், எல்வளை வாராய்-ஒளி பொருந்திய வளையினை யுடையாய் வருவாயாக, விட்டு அகன்றனையோ - என்னைவிட்டுச் சென்றனையோ, விஞ்சையில் தோன்றிய விளங்கிழை மடவாள் - விளங்குகின்ற அணிகளுடன் வித்தையினாலே தோன்றியமடந்தை, வஞ்சம் செய்தனன் கொல்லோ அறியேன் - வஞ்சனை செய்தனளோ அறியேனே, ஒரு தனி அஞ்சுவேன் திருவே வா என-ஒப்பற்ற தனிமையை அஞ்சுகின்றேன் திருவனையாய் வருக என்று;

கடைகொள - முற்ற; வினைமுடி வெய்த என்றுமாம். நெட்டிடை அன்றியும் - நெடுந்தூரம் அன்றாக; அணிமையில் ; உம்: அசை. உவவனம் என்பது முதல் மணிமேகலை கூற்று. ஓரிடங்கொல்-முன் கண்டறியாத ஓரிடமோ வென்க. வாராய் - வருகின்றிலை எனவும், வராது எனவும் உரைத்தலுமாம். மெல்வளை யென்றலுமாம்.


28--35.   திரை தவழ் பறவையும் விரிசிறைப் பறவையும்-அலையில் தவழ்கின்ற புட்களும் விரிந்த சிறகினையுடைய பறவைகளும், எழுந்து வீழ் சில்லையும் ஒடுங்குசிறை முழுவலும் - எழுந்து வீழ்கின்ற சில்லையும் ஒடுங்கிய சிறகினையுடைய முழுவலும், அன்னச்


1 மதுரைக். 11.