பக்கம் எண் :

பக்கம் எண் :119

::TVU::
8. மணிபல்லவத்துத் துயருற்ற காதை
 

சேவல் அரசனாகப் பன்னிறப் புள்ளினம் பரந்து ஒருங்கு ஈண்டி
- அன்னச்சேவலை அரசனாகக்கொண்டு பலநிறங்களையுடைய
பறவை இனங்கள் பரந்து ஒன்றாகக் கூடி, பாசறை மன்னர் பாடி
போல - பகையரசர் இருவருடைய படை வீடுகளில் இருவர் படையும்
எதிரெதிர் இருத்தல்போல, வீசுநீர்ப் பரப்பின் எதிர் எதிர்
இருக்கும் -வீசுகின்ற நீர்ப்பரப்பின் கண்ணே எதிரெதிரே
இருக்கின்ற, துறையும் துறைசூழ் நெடுமணற் குன்றமும் - நீர்த்
துறைகளும் துறைகளைச் சுற்றிலுமுள்ள பெரிய மணற் குன்றுகளும்
ஆகிய,யாங்கனும் திரிவோன்-எவ்விடத்தும் திரிகின்றவள் ;
 
திரைதவழ் பறவை - குளுவை முதலியன. விரிசிறைப் பறவை - போதா முதலியன. எழுந்துவீழ் சில்லை - சிரல் முதலியன. திரை தவழ் பறவை முதலிய நான்கும் நீர்வாழ் பறவைகள். பறவையும்பறவையும் சில்லையும் முழுவலுமாகிய பன்னிறப் புள்ளினம் என்க. பாசறை மன்னர் - போர் குறித்துப் பாசறையிற் சென்று தங்கியிருக்கும் மன்னர். பாடிபோல - பாடியிற் படைகள் எதிரெதிர் இருத்தல்போல - 1"கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும், செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும், கானக் கோழியும் நீர்நீறக் காக்கையும், உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும், வெல்போர் வேந்தர் முனையிடம் போலப். பல்வேறு குழூஉக்குரல் பரந்த வோதையும்" என்பது ஈண்டு ஒத்து நோக்கற்பாலது.

35--43.பாங்கினம் காணாள்-பக்கத்திலுள்ள இனங்களைக் காணாத வளாய், குரல்தலை கூந்தல் குலைந்து பின் வீழ - பூங்கொத்தை இடத்தேயுடைய குழல் அவிழ்ந்து பின்னே வீழ, அரற்றினள் கூஉய் - கூவிப் புலம்பி, அழுதனள் ஏங்கி - ஏங்கி அழுது, வீழ்துயர் எய்திய விழுமக் கிளவியின் தாழ்துயர் உறுவோள் - ஆழமாகிய துன்பத்தின்கண்ணே பொருந்தினோள் மிக்க துயரமடைந்த துன்பத்தைப் புலப்படுத்தும் மொழிகளால், தந்தையை உள்ளி - தந்தையாகிய கோவலனை நினைந்து, எம் இதில் படுத்தும் வெவ்வினை உருப்ப-எம்மை இவ்வகைத் துன்பத்தின்கண் அகப்படுத்தும் கொடிய தீவினையானது வந்து உருப்ப, கோற்றொடி மாதரொடு வேற்று நாடு அடைந்து-திரட்சியாகிய வளையல்களை யணிந்த என் அன்னை கண்ணகியோடு வேறு நாட்டை அடைந்து, வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ என்று அழுவோள் முன்னர் - கூரிய வாளினால் வெட்டுண்டு வருந்திய மணிப்பூண் தாங்கிய மார்பினையுடைய ஐயாவோ என்று அழுகின்றவள் முன்னே ;

குரல் - கூந்தலின் திரட்சியுமாம். அரற்றினள், அழுதனள் என்பன முற்றெச்சம். உறுவோள் விழுமக்கிளவியின் அழுவோள் எனக்


1சிலப். 10 : 114-9.