முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :123
::TVU::
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
5
10
15
20
25
30
35
இடமுறை மும்முறை வலமுறை வாராக்
கொடிமின் முகிலொடு நிலஞ்சேர்ந் தென்ன
இறுநுசுப் பலச வெறுநிலஞ் சேர்ந்தாங்கு
எழுவோள் பிறப்பு வழுவின் றுணர்ந்து
தொழுதகை மாதவ துணிபொரு ளுணர்ந்தோய்
காயங் கரையினீ யுரைத்ததை யெல்லாம்
வாயே யாகுதன் மயக்கற உணர்ந்தேன்
காந்தார மென்னுங் கழிபெரு நாட்டுப்
பூருவ தேயம் பொறைகெட வாழும்
அத்தி பதியெனும் அரசாள் வேந்தன்
மைத்துன னாகிய பிரம தருமன்
ஆங்கவன் றன்பால் அணைந்தற னுரைப்போய்
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை
இன்றேழ் நாளில் இருநில மாக்கள்
நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர்
நாகநன் னாட்டு நானூறி யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்
இதன்பா லொழிகென இருநில வேந்தனும்
மாபெரும் பேரூர் மக்கட் கெல்லாம்
ஆவும் மாவுங் கொண்டுகழி கென்றே
பறையிற் சாற்றி நிறையருந் தானையோ
டிடவய மென்னும் இரும்பதி நீங்கி
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்
காயங் கரையெனும் பேரியாற் றடைகரைச்
சேயுயர் பூம்பொழிற் பாடிசெய் திருப்ப
எங்கோன் நீயாங் குரைத்தவந் நாளிடைத்
தங்கா தந்நகர் வீழ்ந்துகே டெய்தலும்
மருளறு புலவநின் மலரடி யதனை
அரசொடு மக்க ளெல்லாம் ஈண்டிச்
சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்துபல ஏத்திய
அருளறம் பூண்ட ஒருபே ரின்பத்து
உலகுதுயர் கெடுப்ப அருளிய அந்நாள்
அரவக் கடலொலி அசோதரம் ஆளும்
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்