பக்கம் எண் :

பக்கம் எண் :124

::TVU::
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
 

40





45





50





55





60





65





70
இரவி வன்மன் ஒருபெருந் தேவி
அலத்தகச் சீறடி அமுத பதிவயிற்று

இலக்குமி யென்னும் பெயர்பெற்றுப் பிறந்தேன்
அத்தி பதியெனும் அரசன் பெருந்தேவி
சித்திபுரம் ஆளுஞ் சீதரன் திருமகள்
நீல பதியெனும் நேரிழை வயிற்றில்
காலை ஞாயிற்றுக் கதிர்போற் றோன்றிய

இராகுலன் றனக்குப் புக்கேன் அவனொடு
பராவரு மரபினின் பாதன் பணிதலும்
எட்டிரு நாளிலிவ் விராகுலன் றன்னைத்
திட்டி விடமுணுஞ் செல்லுயிர் போனால்
தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை

ஏது நிகழ்ச்சி ஈங்கின் றாகலின்
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய
தவாக்களி மூதூர்ச் சென்றுபிறப் பெய்துதி
அணியிழை நினக்கோர் அருந்துயர் வருநாள்
மணிமே கலாதெய்வம் வந்து தோன்றி

அன்றப் பதியில் ஆரிருள் எடுத்துத்
தென்றிசை மருங்கிலோர் தீவிடை வைத்தலும்
வேக வெந்திறல் நாகநாட் டரசர்
சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு
அறச்செவி திறந்து மறச்செவி யடைத்துப்

பிறவிப்பணி மருத்துவன் இருந்தற முரைக்கும்
திருந்தொளி யாசனஞ் சென்றுகை தொழுதி
அன்றைப் பகலே உன்பிறப் புணர்ந்தீங்கு
இன்றியா னுரைத்த உரைதெளி வாயெனச்
சாதுயர் கேட்டுத் தளரந்துகு மனத்தேன்

காதலன் பிறப்புங் காட்டா யோவென
ஆங்குனைக் கொணர்ந்த அரும்பெருந் தெய்வம்
பாங்கிற் றோன்றிப் பைந்தொடி கணவனை
ஈங்கிவன் என்னும் என்றெடுத தோதினை
ஆங்கத் தெய்வதம் வாரா தோவென

ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தானென்.