பக்கம் எண் :

பக்கம் எண் :126

::TVU::
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
 
16-23.ஆங்கவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய் - அம்மன்னவனிடம் வந்து அறங்கூறும் நீ, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவிடை - இனிய கனிகளையுடைய நாவல் ஓங்கிய இத்தீவின்கண், இன்றேழ் நாளில்-இன்றைக்கு ஏழாவது நாளில், இருநில மாக்கள் நின்று நடுக்கெய்த நீள்நில வேந்தே பூமி நடுங்குறூஉம் போழ் தத்து - பெரிய நிலத்தையாளும் அரசனே பெரிய பூமியிலுள்ள மக்கள் நின்று நடுக்க மெய்துமாறு பூமி நடுங்குதலுறும் பொழுது; இந்நகர் நாக நன்னாட்டு நானூறு யோசனை - இந்த நகரும் நன்றாகிய நாக நாட்டின்கண் நானூறு யோசனைப் பரப்பும், வியன்பாதலத்து வீழ்ந்து கேடெய்தும்-அகன்ற பாதலத்தின்கண் விழுந்து அழிவுறும் ஆகலின், இதன்பால் ஒழிகென - இந்நகரத்தைவிட்டு நீங்குக என்று கூற ;

நாவலோங்குந் தீவு - நாவலந் தீவு ; சம்புத் தீவு. உரைக்கும் நீ ''வேந்தே! கேடெய்தும் ஆகலால் இதன்பால் ஒழிக''வென என்க.

23-30.   இருநில வேந்தனும் - அதனைக் கேட்ட பெரிய பூமியை ஆளும் அரசனும், மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம் - மிகப் பெரிய நகரத்தின்கணுள்ள மக்களுக்கெல்லாம், ஆவும் மாவும் கொண்டு கழிக என்றே பறையிற் சாற்றி - பசுக்களையும் ஏனைய விலங்குகளையும் கொண்டு நகரத்தைவிட்டு நீங்குக என்று பறையறைந்து தெரிவித்து, நிறை அரும் தானையொடு இடவயம் என்னும் இரும்பதி நீங்கி-பகைமேற் செல்லும்போது நிறுத்தலரிய சேனைகளுடன் இடவயம் என்னும் பெரிய நகரத்தினின்றும் நீங்கி, வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன் - வடதிசையிலுள்ள அவந்தி என்னும் பெரிய நகரத்திற்குச் செல்லுகின்றவன்; காயங்கரை எனும் பேரியாற்று அடைகரைச் சேய்உயர் பூம்பொழில் பாடி செய்திருப்ப - காயங்கரை என்னும் பெரிய யாற்றினது அடைகரைக்கண் மிக உயர்ந்த பூஞ்சோலையிற் பாடி செய்து அமர்ந்திருக்க ;

இடவயம் - அத்திபதியின் நகரம். பாடி -படைவீடு. வேந்தனும் சாற்றிச் செல்வோன் இருப்ப வென்க.

31-37. எங்கோன் நீ ஆங்கு உரைத்த அந்நாளிடை - எம்பெருமானாகிய நீ அப்போது கூறிய அந் நாளிலேயே, தங்காது அந் நகர் வீழ்ந்து கேடு எய்தலும்-தாழாமல் அந் நகரம் வீழ்ந்து அழிந்தொழிதலும், மருள் அறு புலவ நின் மலரடி அதனை - மயக்கமற்ற மெய்யறிவினையுடையோய் நின் மலர் போலும் திருவடிகளை, அரசொடு மக்கள் எல்லாம் ஈண்டி-அரசனுடம் மக்களனைவரும் கூடி, சூழ்ந்தனர் வணங்கித் தாழ்ந்து பல ஏத்திய - சுற்றியவர்களாய் வணங்கிப் பணிந்து பலவாறாகத் துதிக்க, அருளறம் பூண்ட ஒரு