பக்கம் எண் :

பக்கம் எண் :127

::TVU::
9. பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை
 
  
பேர் இன்பத்து உலகு துயர் கெடுப்ப அருளிய அந்நாள் - அரு
ளாகிய அறத்தினைக்கொண்ட    ஒப்பற்ற பேரின்பத்தை உலக
மக்களின் துயரத்தை நீக்கும் பொருட்டு அருளிச் செய்த அந்    நாளில்;

நகர் கேடெய்தினமை கூறவே நாகநாட்டு நானூறு யோசனைப் பரப்புக் கேடெய்திய தென்பதும் பெற்றாம். ஏத்திய - ஏத்த ; ஏத்திய அந்நாள் அருளிய அந்நாள் எனத் தனித்தனி முடித்தலுமாம். இன்பத்து இன்பத்தை: சாரியை நிற்க உருபு தொக்கது.

38-47.   அரவக்கடல் ஒலி அசோதரம் ஆளும்-கடல் ஒலிபோன்ற முழக்கத்தையுடைய அசோதர    நகரத்தையாளும், இரவிவன்மன் ஒரு பெருந்தேவி - இரவிவன்மனுடைய ஒப்பற்ற    பெருந்தேவியாகிய, அலத்தகச் சீறடி அமுதபதி வயிற்று-செம்பஞ்சிக் குழம்பு தோய்ந்த சிறிய    அடிகளையுடைய அமுதபதி என்பவள் வயிற்றில் இலக்குமி என்னும் பெயர் பெற்றுப்    பிறந்தேன்-பிறந்து இலக்குமி என்னும் பெயர் பெற்றேன், அத்திபதி எனும் அரசன் பெருந்தேவி    -அத்திபதி என்னும் அரசனுடைய பெருந்தேவியும், சித்திபுரம் ஆளும் சீதரன்    திருமகள்-சித்திபுரத்தை ஆண்ட சீதரன் என்பவனுடைய அழகிய மகளும் ஆகிய, நீலபதி எனும்    நேரிழை வயிற்றில் - நீலபதி என்கின்ற மெல்லியலின் வயிற்றில், காலை ஞாயிற்றுக் கதிர்போல் தோன்றிய-கதிர்களுடைய இளம்பரிதியைப்போல் உதித்த, இராகுலன் தனக்குப் புக்கேன் -    இராகுலனுக்கு மனைவியாகப் புகுந்தேன், அவனொடு பராவரு மரபின் நின் பாதம்    பணிதலும்-அவ்விராகுலனோடு வழுத்துதற்குரிய நின் அடிகளைப் பணிதலும் ;

கடல் அரவமென மாறுக. அலத்தகன் - செவ்வரக்கு என்பாருமுளர். பிறந்து பெயர் பெற்றேன் என விகுதி பிரித்துக் கூட்டுக. கதிர் ஞாயிறு என்க.

48-50.   எட்டிரு நாளில் இவ்விராகுலன் தன்னைத் திட்டிவிடம் உணும்-பதினாறு நாளில் இந்த இராகுலனைத் திட்டிவிடம் என்னும் பாம்பு உண்ணும், செல்லுயிர் போனால் தீயழல் அவனொடு சேயிழை மூழ்குவை - அவனது உயிர் பிரிந்தால் நீயும் அவனொடு தீயிடைக் குளிப்பாய்;

திட்டி - திருஷ்டி; திட்டிவிடம்-கண்ணில் நஞ்சுடைய பாம்பு ; அது பார்த்தால் உயிர்கள் சாம் என்பர். இந்நூலின்கண் பின்பு (11; 100 ; 21 ; 11; 21: 40 ; 23 : 69 ; 23 : 84.) பலவிடத்து இது கூறப்பட்டுள்ளமை காண்க. 1"திட்டியின் விட மன்ன கற்பின் செல்வியை" என்றார் கம்பரும். சேயிழை : முன்னிலை.


1கம்ப. கும்பகர்ண. 80.