51--53. ஏது நிகழ்ச்சி ஈங்கு இன்றாதலின்-உயர்நிலை
எய்துதற்குரிய ஏது நிகழ்ச்சி இவ்விடத்தில் இல்லையாகலின்,
கவேர கன்னிப் பெயரொடு விளங்கிய-காவிரியின் பெயரொடு விளங்கிய
(காவிரிப் பூம்பட்டினம் என்னும்), தவாக்களிமூதூர்
சென்று பிறப்பு எய்துதி- அழியாத மகிழ்ச்சியினையுடைய
மூதாரின்கண் சென்றுபிறப்பினை யடைவாய் ;
|
கவேரகன்னி-காவேரி
; அரச இருடியாகிய கவேர ரென்பவர் வீடு பெறுதலை விரும்பிப் பிரமனைக்
குறித்து அருந்தவஞ் செய்து, அவனருளால், விண்டுமாயையைத் தம் புதல்வியாக
அடைந்து முத்திபெற்றன ரென்றும், பின்பு அக் கன்னி பிரமன் கட்டளைப்படி
நதி வடிவு கொண்டு சென்றமையால் அந்நதி கவேர கன்னியென்றும் காவேரி
யென்றும் பெயர் பெற்ற தென்றும் ஆக்கினேய புராணத்தின் காவேரி
மான்மியத்தால் வெளியாகின்ற தென்பர்.
|
54--57. அணியிழை
நினக்கு ஓர் அருந்துயர்வரு நாள் - அழகிய அணிகலன்களையுடையாய் நினக்கு
ஓர் அரிய துன்பம் உண்டாகின்ற நாளில், மணிமேகலா தெய்வம் வந்து
தோன்றி அன்றப் பதியில் ஆரிருள் எடுத்து-அப் பதியின்கண் மணிமேகலா
தெய்வம் வந்து வெளிப்பட்டு மிகுந்த இருளில் எடுத்துச் சென்று, தென்றிசை
மருங்கில் ஓர் தீவிடை வைத்தலும் - தென்றிசையிலுள்ள ஒரு தீவின்கண்
வைத்தலும் ;
|
அருந்துயர் உதயகுமரன்
அகப்படுத்தக் கருதி வருதல் ; அவனால் மணிமேகலைக்குண்டாகிய மனவேறுபாடுமாம்.
|
58--64. வேக
வெந்திறல் நாகநாட்டு அரசர்-மிகக் கடிய வலியினையுடைய நாகநாட்டு
மன்னர்களின், சினமாசு ஒழித்து மனமாசு தீர்த்தாங்கு-சினமாகிய
குற்றம் நீங்க அவர்கள் உள்ளத்தின் குற்றங்களை ஒழித்து, அறச்செவி
திறந்து மறச்செவி அடைத்து-அறத்தைக் கேட்டற்குரிய காதுகளைத் திறந்து
பாவத்தைக் கேட்கின்ற காதுகளை அடைத்து, பிறவிப்பிணி மருத்துவன்
இருந்து அறம் உரைக்கும்-பிறவியாகிய நோயினைத் தீர்க்கின்ற மருத்துவனாகிய
புத்தன் அமரந்து அறங் கூறுகின்ற, திருந்துஒளி ஆசனம் சென்று கைதொழுதி
- திருந்திய ஒளி யமைந்த ஆதனத்தைச் சென்று கைதொழுவாய், அன்றைப்
பகலே உன் பிறப்பு உணர்ந்து ஈங்கு இன்று யான் உரைத்த உரை தெளிவாய்
என - அந்நாளிலே நின் முற் பிறவியினையும் அறிந்து ஈண்டு இப்பொழுது
யான் உரைத்த; மொழிகளையும் தெளிந்து கொள்வாய் என்று நீ உரைக்க
;
|
வேகமும் வெம்மையும் ஒரு
பொருளன. மனமாசு - காம மயக்கங்கள். அறச்செவி - அறங்கேட்டற்குரிய
செவி. திறந்து என்றார். |