65--71. சாதுயர் கேட்டுத் தளரந்து
உகு மனத்தேன் - இராகுலன் இறப்பான் என்ற துன்பத்தைக் கேட்டுத்
தளர்ந்து சிந்துகின்ற உள்ளமுடையேன், காதலன் பிறப்பும் காட்டாயோ
என - என் கணவனது மறு பிறப்பையும் காட்டாயோ என வேண்ட, ஆங்கு
உனைக் கொணர்ந்த அரும்பெரும் தெய்வம் பாங்கில் தோன்றிப் பைந்தொடி
கணவனை ஈங்கிவன் என்னும்-அவ்விடத்தில் நின்னைக் கொண்டு சென்ற
அரிய பெரிய தெய்வம் பக்கத்தில் தோன்றி நின் கணவனை இன்னான்
என்று உரைக்கும், என்று எடுத்து ஓதினை-என எடுத்துரைத்தாய், ஆங்கத்
தெய்வம் வாராதோ என ஏங்கினள் அழூஉம் இளங்கொடி தான் என் -
அத்தெய்வம் இப்பொழும் வாராதோ என்று ஏங்கி அழுது கொண்டிருந்தாள்
என்க.