[மணிமேகலை அழுதுகொண்டிருக்கையில்
"புத்த பீடிகைக் காட்சியால் இவள் பழம்பிறப்பை யறிந்தாள் ; இவள் இயல்பும்
அழகியது" என்றெண்ணி, வானினின்றும் இறங்கிய மணிமேகலா தெய்வம், அவள் கேட்கும்படி,
புத்த பீடிகையைப் புத்தராகவே மதித்துத் துதித்து வலம் வந்து வணங்கியது. வணங்கிய
தெய்வத்தை மணிமேகலை வணங்கி, "உன் திருவருளால் என் பிறப்புணர்ந்தேன் ;
என் கணவன் யாங்குளன்" என்று கேட்டனள்; கேட்டலும் அத்தெய்வம் "இலக்குமி!
கோட்பாயாக! நீ ஒரு நாள் ஒரு பொழிலின்கண் இராகுலனோடு ஊடியிருந்தாய்; அவன்
ஊடல் தீர்த்தற்கு உன் அடியை வணங்கினான் ; வணங்குகையில், இரத்தினத் தீவிற்
சென்று தருமசக்கரம் உருட்டி வருவோனாகிய சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரண
முனிவன் நண்பகற் பொழுதில் விசும்பினின்றும் இறங்கி வர, நீ அவனைக் கண்டு
மெய்ந் நடுங்கி நாணிப் பணிந்தனை; அதுகண்ட இராகுலன் ''இங்கு வந்தவன் யார்''
என்று வெகுண்டுரைக்க, நீ அவன் வாயைப் பொத்தி, ''இப் பெரியோனுடைய மலரடியை
வணங்கித் துதியாது பிழை செய்தனை என்றுரைத்து, அவனோடும் அம்முனிவம் அடிகளை
வணங்கி, "யாங்கள் நின் தமரல்ல மாயினும் அம் தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்;
அமுது செய்தருள்க," என்று வேண்டிக் கொண்ரந்து உண்பித்தாய்; அந்நாள் அவன்
உண்டருளிய அவ்வறம் நின் பிறப்பை அறுத்திடும் ; அவ் விராகுலனே உதயகுமரன்;
அதனாலேதான் அவன் மனம் உன்னை விரும்பியதன்றி உன் மனமும் அவனை மிகப் பற்றியது
; அப்பற்று மாற்றி உன்னை நல்வழிப்படுத்த நினைந்து நின்னை இத்தீவிற் கொணர்ந்து
வைத்து இப் பீடிகையைக் காட்டினேன். இன்னுங்கேள்; முற்பிறப்பில் உன் தவ்வையராயிருந்த
தாரையையும் வீரையையும் அங்க நாட்டிலுள்ள கச்சய நகரத்தரசனாகிய துச்சயனென்பவன்
மணஞ் செய்துகொண்டு ஒரு நாள் அவர்களுடன் சென்று மலைவளங்கண்டு கங்கைக்கரையை
எய்தி யிருந்தபொழுது, அறவணவடிகள் அங்கே வரக்கண்டு உடன் எழுந்து வணங்கிய அவன்,
''இங்கெழுந்தருளிய நீர் யாவிர்'' என்று கேட்க. அவர், ''பாத பங்கய மலையைத்
தொழுது வணங்க வந்தேன் ; முற்காலத்தே புத்ததேவர் அம் மலையில் உச்சியில்
நின்று அறமுரைத்த பொழுது அவரது அடிச் சுவடு பொருந்தினமையால் அம் மலை அப் பெயரினதாயிற்று;
நீவிரும் அதனைக் கண்டு வழிபடுமின்;'' என்று கூறினர். அவல் கூறியவாறு சென்று
தொழுதமையால் தரையும் வீரையும் முறையேமாதவியாகியும் சுதமதியாகியும் வந்து நின்னுடன்
கூடினர்; நீ பழம்பிறப்பை யறிந்தாய்; அறத்தினியல்பையும் அறிந்து கொண்டாய்;
பிற சமயவாதிகளின் கொள்கைகளையும் இனிக் கேட்பாய்; கேட்குங்கால் உன்னை
''இளம்
|