பக்கம் எண் :

பக்கம் எண் :131

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 
பிராயமுடைய பெண்'' என நினைந்து, அன்னோர் தத்தம் சமயவுண்மைகளைக் கூறார், ஆகலின், அப்பொழுது நீ வேற்றுருக் கொள்ளவேண்டும்'' என்று கூறி, வேற்றுரு வெய்துவிப்பதும் வானிலே இயங்கச் செய்வதுமாகிய இரண்டு மந்திரங்களை அவளுக்கு அறிவுறத்தி, நீ புத்தர் அருளிய திருவறம் எய்துதல் உறுதி யென்றுணர்வாயாக ; பீடிகையை வணங்கி நின் பதிக்கண் செல்வாயாக, என்று எழுந்தோங்கி, "யான் மறந்ததும் உண்டு," என்று மீட்டும் இறங்கி, "மககள் யாக்கை உணவின் பிண்டம்; இப்பெரு மந்திரம் இரும் பசி அறுக்கும்," என்று அதனை அருளிச் செயது; வானில் எழுந்து சென்றது.]





5





10





15





20





25


அறவோ னாசனத் தாயிழை யறிந்த
பிறவிய ளாயினள் பெற்றியு மைதென
விரைமல ரேந்தி விசும்பூ டிழிந்து
பொருவறு பூங்கொடி பூமியிற் பொலிந்தென
வந்து தோன்றிய மணிமே கலாதெய்வம்

முந்தைப் பிறப்பெய்தி நின்றோள் கேட்ப
உயிர்க ளெல்லாம் உணர்வுபா ழாகிப்
பொருள்வழங்கு செவித்துளை தூர்ந்தறி விழந்த
வறந்தலை யுலகத் தறம்பாடு சிறக்கச்
சுடர்வழக் கற்றுத் தடுமாறு காலையோர்

இளவள ஞாயிறு தோன்றிய தென்ன
நீயோ தோன்றினை நின்னடி பணிந்தேன்
நீயே யாகிநிற் கமைந்த இவ் வாசனம்
நரமிசை வைத்தேன் தலைமிசைக் கொண்டேன்
பூமிசை யேற்றினேன் புலம்பறு கென்றே

வலங்கொண் டாசனம் வணங்குவோள் முன்னர்ப்
பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்தெனப் பொருந்தி
உன்றிரு வருளால் என்பிறப் புணர்ந்தேன்
என்பெருங் கணவன் யாங்குள னென்றலும்
இலக்குமி கேளாய் இராகுலன் றன்னொடு

புலத்தகை யெய்தினை பூம்பொழி லகவயின்
இடங்கழி கமாமொ டடங்கா னாயவன்
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழிச்
சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெருமர லொழித்தாங் கிரத்தின தீவத்துத்

தரும சக்கரம் உருட்டினன் வருவோன்.