பக்கம் எண் :

பக்கம் எண் :132

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 




30





35





40





45





50





55





60
வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின
வந்து தோன்றலும் மயங்கினை கலங்கி
மெல்லியல் கண்டனை மெய்ந்நடுக் குற்றனை
நல்கூர் நுசுப்பினை நாணினை யிறைஞ்ச

இராகுலன் வந்தோன் யாரென வெகுளலும
விராமலர்க் கூந்தங் அவன்வாய் புதையா
வானூ டிழிந்தோன் மலரடி வணங்காது
நாநல் கூர்ந்தனை என்றவன் றன்னொடு
பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்

கமர கேள்நின் தமரல மாயினும்
அந்தீந் தண்ணீர் அமுதொடு கொணர்கேம்
உண்டி யாமுன் குறிப்பின மென்றலும்
எம்மனை யுண்கேன் ஈங்குக் கொணர்கென
அந்நா ளவனுண் டருளிய அவ்வறம்

நின்னாங் கொழியாது நின்பிறப் பறுத்திடும்
உவவன மருங்கில் உன்பாற் றோன்றிய
உதய குமரன் அவனுன் னிராகுலன்
ஆங்கவ னன்றியும் அவன்பா லுள்ளம்
நீங்காத் தன்மை நினக்குமுண் டாகலின்

கந்த சாலியின் கழிபெரு வித்தோர்
வெந்துகு வெங்களர் வீழ்வது போன்மென
அறத்தின் வித்தாங் காகிய வுன்னையோர்
திறப்படற் கேதுவாய்ச் சேயிழை செய்தேன்
இன்னுங் கேளாய் இலக்குமி நீநின்

தவ்வைய ராவோர் தாரையும் வீரையும்
ஆங்கவர் தம்மை யங்கநாட் டகவயின்
கச்சய மாளுங் கழற்கால் வேந்தன்
துச்சய னென்போன் ஒருவன் கொண்டனன்
அவருட னாங்கவன் அகன்மலை யாடிக்

கங்கைப் பேரியாற் றடைகரை யிருந்துழி
மறவண நீத்த மாசறு கேள்வி
அறவண னாங்கவன் பாற்சென் றோனை
ஈங்கு வந்தீர் யாரென் றெழுந்தவன்
பாங்குளி மாதவன் பாதம் பணிதலும்