பக்கம் எண் :

பக்கம் எண் :133

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 





65





70





75





80





85





90


ஆதி முதல்வன் அறவாயி யாள்வோன
மாதுய ரெவ்வ மக்களை நீக்கி
விலங்குந் தம்முள் வெரூஉம்பகை நீக்கி
உடங்குயிர் வாழ்கவென் றுள்ளங் கசிந்துகத்
தொன்றுகா லத்து நின்றற முரைத்த

குன்ற மருங்கிற் குற்றங் கெடுங்கும்
பாத பங்கயங் கிடத்தலின் ஈங்கிது
பாதபங் கயமலை எனும்பெயரத் தாயது
தொழுது வலங்கொள்ள வந்தேன் ஈங்கிப்
பழுதில் காட்சியீர் நீயிருந் தொழுமென

அன்றவ னுரைத்த அவ்வுரை பிழையாது
சென்றுகை தொழுது சிறப்புச் செய்தலின்
மாதவி யாகியுஞ் சுதமதி யாகியும்
கோதையஞ் சாயல் நின்னொடு கூடினர்
அறிபிறப் புற்றனை அறம்பா டறிந்தனை

பிறவற முரைப்போர் பெற்றியுங் கேட்குவை
பல்வேறு சமயப் படிற்றுரை யெல்லாம்
அல்லியங் கோதை கேட்குறு மந்நாள்
இளையள் வளையோ யென்றுனக் கியாவரும்
விளைபொரு ளுரையார் வேற்றுரு வெய்தவும்

அந்தரந் திரியவும் ஆக்குமிவ் வருந்திறன்
மந்திரங் கொள்கென வாய்மையி னோதி
மதிநாண் முற்றிய மங்களத் திருநாள்
பொதுவறி விகழ்ந்து புலமுறு மாதவன்
திருவற மெய்துதல் சித்தமென் றுணர்நீ

மன்பெரும் பீடிகை வணங்கினை யேத்தி
நின்பதிப் புகுவாய் என்றெழுந் தோங்கி
மறந்தது முண்டென மறிந்தாங் கிழிந்து
சிறந்த கொள்கைச் சோயிழை கேளாய்
மக்கள் யாக்கை உணவின் பிண்டம்

இப்பெரு மந்திரம் இரும்பசி யறுக்குமென்
றாங்கது கொடுத்தாங் கந்தர மெழுந்து
நீங்கிய தாங்கு நெடுந்தெய்வந் தானென்