அறிந்த பிறவியள் - முற்பிறப்பை யறிந்தவள்
என்க. பெற்றி - பேறு; 1
"பிணிப்பறுத்
தோர்தம் பெற்றி யெய்தவும்" என்பதிற்போல. பூங்கொடி ஏந்தி இழிந்து பொலிந்தெனத்
தோன்றிய தெய்வ மென்க.
6--12. முந்தைப் பிறப்பு எய்தி நின்றோள் கேட்ப - முற்பிறப்பினையறிந்து
நின்ற மணிமேகலை கேட்க, உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகி-உயிர்கள் யாவும்
உணர்வு பாழடைந்து, பொருள் வழங்கு செவித்துளை தூர்ந்து-அறம் வழங்குதற்குரிய
செவிகளின் துளை அதனைக் கேளாது தூர்ந்து, அறிவு இழந்த வறந்தலை உலகத்து - அறிவினை
யிழந்த வறுமையைத் தன்னிடத்தே உள்ள உலகின்கண் அறம் பாடு சிறக்க - அறத்தின்
கூறுபாடுகள் சிறப்படையுமாறு, சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலை ஓர் இளவள ஞாயிறு
தோன்றியது என்ன - ஒளி வழங்குதலின்றித் தடுமாறுகின்ற பொழுதில் ஓர் அழகிய
இளம் பரிதி தோன்றியதுபோல, நீயோ தோன்றினை நின் அடிபணிந்தேன்-நீயோ
உதித்தருளினை நின் திருவடிகளைப் பணிந்தேன் ;
பொருள் - உறுதிப்பொருள் ; ஈண்டு அறம்;
2
"பொருணீங்கிப் பொச்சாந்தார்"
என்புழிப் பரிமேலழகர் உரைத்தமை காண்க அறிவிழந்த வறந்தலை யுலகம் - அறிவின்மையாகிய
வறுமையையுடைய உலக என்க. அறம்பாடு என்பதற்கு அறத்தின் தோற்றம் என்றும்,
சுடர் என்பதற்கு ஞாயிறு என்றும் கூறுதலுமாம்.
12--6. நீயே ஆகி நிற்கு அமைந்த இவ் வாசனம்-நீயே யாகி நினக்கு
அமைந்த இப் பீடிகையை, நாமிசை வைத்தேன் தலைமிசைக் கோண்டேன் - நாவாற்றுதித்தேன்
தலையால் வணங்கினேன், பூமிசை ஏற்றினேன் - உள்ளத் தாமரையின்மீது இருத்தினேன்.
புலம்பு அறுக என்று - என் வருத்தம் நீங்குக என்று கூறி, வலங் கொண்டு ஆசனம்
வணங்குவோள் முன்னர் - பீடிகையை வலங் கொண்டு பணிகின்ற மணிமேகலா தெய்வத்தின்
முன்னே;
1
சில்ப். 15 :100.2
குறள். 246.
|