பக்கம் எண் :

பக்கம் எண் :135

Manimegalai-Book Content
10. மந்திரங் கொடுத்த காதை
 

நீயே யாகி நிற்கமைந்த இவ் வாசனம் என்றமையால் பீடிகையின் வழிபாடு புத்த தேவன் வழிபாடே யென்பது போதரும். பூ - நெஞ்சத் தாமரை.

17-9. பொலங்கொடி நிலமிசைச் சேர்ந்துஎனப்பொருந்தி-மணிமேகலைபொற்கொடியானது நிலத்தின் மீது சேர்ந்தாற்போல விழுந்து வணங்கி, உன் திருவருளால் என் பிறப்பு உணர்ந்தேன்- நின்னுடைய திருவருளினாலே என்னுடைய முற்பிறவியை அறிந்தேன், என்பெருங் கணவன் யாங்குளன் என்றலும்-என் பெருங் கொழுநன் எவ்விடத்துப் பிறந்துளான்என்று கேட்பவும் ; பொலங்கொடி - பொற்கொடி ; காமவல்லி

20-8. இலக்குமி கேளாய்-இலக்குமியே கேட்பாயாக; இராகுலன் தன்னொடு புலத்தகை எய்தினைபூம்பொழில் அகவையின் - நீ நின் கணவனாகிய இராகுலனோடு பூச்சோலையின் உள்ளிடத்தே ஊடலுற்றனை, இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்-அப்பொழு அவன் வரம்பு கடந்து எழுதற்குக் காரணமாகிய காமத்தொடு அடங்காதவனாய் மடந்தை மெல்லியல் மலரடிவணங்குழி-மெல்லியில் மடந்தையாகிய நின் மலர்போலும் அடிகளை வணங்கும்பொழுது, சாதுசக்கரன் மீவிசும்பு திரிவோன்-உயர்ந்த வானின் கண் திரிவோனாகியசாதுசக்கரன் என்னும் முனிவன், தெருமரல் ஒழிந்தாங்கு இரத்தின தீவத்து மனக்கவற்சி நீங்கி இரத்தின தீவத்தின்கணிருந்து, தருமசக்கரம் உருட்டினன் வருவோன்-அறவாழியை உருட்டிக்கொண்டு வருகின்றவன், வெங்கதிர் அமயத்து-நண்பகற்பொழுதிலே, வியன்பொழில் அகவயின் வந்து தோன்றலும்-அப் பரந்த சோலையினுள்ளே வந்து தோன்றுதலும்;

பழம்பிறப் பெய்தி நின்றாளாகலின் அத்தெய்வம் மணிமேகலையை இலக்குமியென் றழைத்தது. புலத்தை - ஊடற்றன்மை; ஊடற் கூறுமாம். இடங்கழி காமம் - வரம்பு கடந்த
காமமுமாம்; இடங்கழி என்பதே காமத்தை யுணரத்தலுமுண்டு. மெல்லியல் மலர் எனக் கொண்டு, மென்மைத் தன்மையுடைய மலர்போலும் அடி யென்னலுமாம். சாதுசக்கரன் - சாதுக்களின் மண்டலத்திலுள்ளவன் எனப் பொருள்படும் காரணப்பெயர்; ஓம் மணிபத்மேஹும் என்னும் மந்திரம் சுற்றிலும் எழுதப்பட்ட உலோகத்தாலாகிய சக்கரத்தை வலக்கையில் வைத்துச் சுழற்றிகொண்டிருத்தல் பௌத்தர்களிற் சிலருடைய வழக்கமென்றும், இவனும் அங்ஙனம் செய்பவனாதல் வேண்டுமென்றும் கூறுவர். இரத்தின தீவம்-இது மணிபல்லவத்திற்கு அயலிலுள்ளதோர் சிறு தீவு ; இத் தீவும், இதிலுள்ள சமந்தமென்னும் மலை முதலியவும் வரும் காதையானறியப்படும். தருமத்தைத் தடையின்றிச் செலுத்தினானென்பார், அதனைச் சக்கரமாக உருவகப்படுத்தி, உருட்டினான்