என்றார். முன்பு "அறக்கதி
ராழி திறப்பட வுருட்டி" (5.76) என்றமையுங் காண்க. சாதுசக்கரன் திரிவோன்
வருவோன் வந்து தோன்றுதலுமென்க.
28--31. மயங்கினை
கலங்கி மெல்லியல் கண்டனை மெய் நடுங் குற்றனை - மெல்லியலே நீ அவனைக் கண்டு
மயங்கிக் கலக்கமுற்று உடல் நடுக்கமடைந்த, நல்கூர் நுசுப்பினை நாணினை இறைஞ்ச-
வறுமை யெய்திய இடையினை யுடையையாய் நாணமுற்று வணங்க, இராகுலன் வந்தோன் யார்
என வெகுளலும் - ஈண்டு வந்தவன் யாவன் என இராகுலன் சினங்கொள்ளலும்;
மெலிந்து ஒசிவதனை நல்கூரந்ததென்று
உபசரித்தார். கணவன் தன் அடியில்
வணங்குழிவந்தனனாகலின் நாணுதலுற்றாளென்க. மயங்குதல் முதலியன இறைபொருளாகப் பிறந்த அச்சமென்னும்
மெய்ப்பாடு. இராகுலன் வெகுண்டமை குடிகோள் பற்றி வந்த வெகுளி யென்னும் மெய்ப்பாடு.
32--8.
விரா
மலர்க் கூந்தல் அவன் வாய் புதையா - மணம் பொருந்திய மலர்களை யணிந்தகூந்தலையுடைய
நீ அவன் வாயைப் புதைத்து, வானூடு இழிந்தோன் மலர் அடிவணங்காதுநா நல் கூர்ந்தனை
என்று - விசும்பினின்றும் இறங்கிய பெரியோனின் திருவடி மலர்களைவணங்காமல்
நா வறுமையுற்றனை என்று கூறி, அவனொடும் பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு-பகைகளையறுத்த
புத்ததேவன் திருவடிக்கு அன்பனாகிய அம்முனிவனுடைய அடிகளை அவனோடும் வணக்கஞ்செய்து,
அமர கேள் நின் தமரலம்ஆயினும்-தேவனே கேட்பாயாக யாம் நினக்குச் சிறந்த
அன்பரல்லே மாயினும், அம்தீந்தண்ணீர் அமுதொடு கொணர்கேம் - இனிய குளிர்ந்த
நீரும் உணவும் கொண்டு வருமேம், உண்டி - அவற்றை உண்பாய், யாம் உன் குறிப்பினம்
என்றலும்-அடியேங்கள் நின் குறிப்பின்வழி ஒழுகுவேம் என்று நீ உரைத்தலும்.ன்பனாகிய அம்முனிவனுடைய
அடிகளை அவனோடும் வணக்கஞ்செய்து, அமர கேள் நின் தமரலம் ஆயினும்-தேவனே
கேட்பாயாக யாம் நினக்குச் சிறந்த அன்பரல்லே மாயினும், அம் தீந்தண்ணீர்
அமுதொடு கொணர்கேம் - இனிய குளிர்ந்த நீரும் உணவும் கொண்டு வருமேம்,
உண்டி - அவற்றை உண்பாய், யாம் உன் குறிப்பினம் என்றலும்-அடியேங்கள் நின்
குறிப்பின்வழி ஒழுகுவேம் என்று நீ உரைத்தலும்.
வானூடிழிந்தமையே அவனது பெருமையை
விளக்குமென்று குறிப்பித்தவாறாயிற்று. நாவானது சாரணனைத் துதித்தலாகிய பயன்
கொள்ளாமையின் நா வறுமையுற்றாய் என்றாள். பகை - காம வெகுளி முதலிய உட்பகை.
பாத்தியன் - அடியான் என்னும் பொருட்டு ; நம்பியாண்டார் நம்பிகள் மாணிக்கவாசகரைத்
''திருவாதவூர்ச் சிவ பாத்தியன்,'' என்று கூறினமையுங் காண்க. உண்டி - உண்ணுதி:
வேண்டிக்கோடலில் வந்தது.
39--41. எம்மனை
உண்கேன் ஈங்கு கொணர்கென - தாயே உண்பேன் இங்கே கொண்டு வருக என்று சொல்லி,
அந்நாள் அவன் உண்டருளிய அவ்வறம் - அந்நாளில் அம் முனிவன் உண்டமையாலாகிய
அந்த அறமானது, நின்னாங்கு ஒழியாது நின் பிறப்பு அறுத்திடும்-நின்னைவிட்டு
நீங்காது நினது பிறப்பை அறுத்தவிடும்
|