42--9. உவவன மருங்கில் உன்பால் தோன்றிய உதயகுமரன் அவன் உன் இராகுலன்
- உவவனத்தில் நின்னிடம் வந்த உதயகுமரனாகிய அவனே நின் கணவன் இராகுலன்,
ஆங்கவன் அன்றியும் அவன்பால் உள்ளம் நீங்காத் தன்மை நினக்கும் உண்டாகலின்
- அவ் வுதயகுமரன் நின்பால் நீங்காத விருப்பதைச் செலுத்துவதன்றியும் அவனிடஞ்
சென்ற உள்ளம் நீங்காததன்மை நினக்கும் உள்ளமையால், கந்தசாலியின்
கழிபெருவித்து-கந்தசாலி என்னும் நெல்லின் மிகச் சிறந்த விதை, வெந்து உகு
வெண்களர் வீழ்வது போன்ம் என - வெந்து உருகுகின்ற வெள்ளிய உப்பு நிலத்தில்
வீழ்கின்றதுபோலும் என்று, அறத்தின் வித்தாங்கு ஆகிய உன்னை ஓர் திறப்படற்கு
ஏதுவாச் சேயிழை செய்தேன் - சேயிழாய் அறத்தின் விதையாகிய நின்னை மனம்
ஒரு வழிப்படுதற்குக் காரணமாகச்செய்தேன் ;
குமரனாகிய அவனென்க. அவன் அன்றியும் -
அவன் உன்பால் உள்ளம் நீங்காதிருப்பதன்றியும் என விரித்துரைக்க. மணிமேகலை
உதயகுமரனை இடைவிடாது நினைத்திருந்தாள் என்பது, அவன் வெட்டுண்டிறந்தபொழுது,
1
"உவவன மருங்கி னின்பா
லுள்ளம் தவிர்விலேனாதலின்" என்று அவள் அவனைக் குறித்துக் கூறுவதனால் அறியப்படும்.
சாலி - சிறந்த நெல், கந்தசாலி - மணமுள்ள ஒருவகைச் சிறந்த நெல், அறத்திற்கு
மூலமாகிய நீ உதயகுமரனை விரும்பின் நின்னியல்பு கந்தசாலியின் வித்துக் களர்
நிலத்து விழ்ந்ததுபோன்று பயன்றறுப்போம் என்றபடி. மணிமேகலையின் உயர்வுபற்றிக்
கந்தசாலியை உவமை கூறினார். போன்ம்: ஈற்றுமிசை யுகரங்கெட்டு மயக்க விதியின்மையின்
லகரம் திரிந்து வந்தது.
50--6.இன்னும் கேளாய் இலக்குமி நீ-இலக்குமி நீ இன்னும் கேட்பாயாக,
நின் தவ்வையர் ஆவோர் தாரையும் வீரையும் - நின் முற் பிறந்தோர் தாரையும்
வீரையும் ஆவர், ஆங்கவர் தம்மை - அவர்களை, அங்கநாட்டு அகவயின் - அங்கநாட்டினுள்ளதாகிய,
கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் - கச்சய நகரத்தை ஆண்ட வீரக் கழலணிந்த
காலையுடைய வேந்தனாகிய, துச்சயன் என்போன் ஒருவன் கொண்டனன்-துச்சயன் என்னும்
பெயருடைய ஒருவன் மணந்தனன், அவருடன் ஆங்கவன் அகன்மலை ஆடி - அம் மன்னவன்
அம் மகளிருடன் அகன்ற மலைப்பக்கங்களில் விளையாடி, கங்கைப்பேரியாற்று அடைகரை
இருந்துழி - கங்கையாற்றின் அடைகரையில் இருந்தபொழுது ;
தவ்வை
- தமக்கை ; 2
"செய்யவள்,
தவ்வையைக் காட்டிவிடும்" என்பது காண்க.
1
மணி. 21: 13-4. 2
குறள்.
197.
|