தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும்
ஆபுத் திரன்கை யமுத சுரபியெனும்
மாபெரும் பாத்திரம் மடக்கொடி கேளாய்
அந்நா ளிந்நாள் அப்பொழு திப்பொழுது
நின்னாங்கு வருவது போலும் நேரிழை
ஆங்கதிற் பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான்தொலை வில்லாத் தகைமைய தாகும்