உயிருடன தீயிற் குளித்து வெந்தமையின்
''உயிருடன் வேவேன்'' என்றாள். வேவேன் : பெயர். முற்பிறப்பிலே கணவன் திட்டிவிடத்தாலிறந்ததும்,
இவள் தீயிற் குளித்ததும் (9:49--50) முன்னரும் போந்தமை யறிக. வேவேன்
உணர்வொழி காலத்துக் கனாமயக்குற்றேன் என்க. ''அதன் பயனே......என்கைப்
புகுந்தது'' என்னுங் கருத்து உண்மை நூற் றுணிபாதல், 1"பிறப்பென்னும்
பேதைமை" என்னுங் குறளுரையில்; "உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால்
யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும்
துணிபாகலின்" எனப் பரிமேலழகர் கூறியவாற்றானும் அறியப்படும். புகுந்தது அதன்பயனே
யாகுமென்க.
107--18.நாவலொடு
பெரிய மாபெருந் தீவத்து-மிகப் பெரிய சம்புத் தீவின்கண். வித்தி நல்லறம்
விளைந்த அதன் பயன் - நல்லறத்தை விதைத்து அதன்கண் விளைந்த பயனாகிய
செல்வத்தை, துய்ப்போர் தம்மனை - அனுபவிக்கும் செல்வருடைய இல்லத்தில்,
துணிச் சிதர் உடுத்து - கிழிந்த சீரைகளை உடுத்திக்கொண்டு, வயிறுகாய் பெரும்பசி
அலைத்தற்கு இரங்கி - வயிற்றினைக் காய்கின்ற பெரிய பசி அலைத்தலால்
வருந்தி, வெயில் என முனியாது புயல் என மடியாது - மிக்க வெயில் என்று வெறுப்படையாமலும்
மழை என்று ஓரிடத்தில் தங்காமலும் சென்று, புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து
- தலைவாயிலில் நின்றுகொண்டு துன்பமிகுந்து, முன் அறங்கடை - முற்பிறப்பிற்
செய்த தீவினையால், நில்லாது அயர்வோர் பலரால்-ஓரிடத்தில் நில்லாமல்
அயர்கின்றவர் பலராவர் ஆகலின், ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி-பெற்ற
குழவியினது முகத்தைக் கண்டு இரங்கி, தீமபால் சுரப்போள் தன்முலை போன்றே
- இனிய பாலைச் சுரக்கின்ற தாயின் கொங்கையைப் போல, நெஞ்சுவழிப் படூஉம்
விஞ்சைப் பாத்திரத்து - மனத்தின் வழியே ஒழுகும்விஞ்சையையுடைய இப்பாத்திரத்தின்கண்,
அகன் சுரைப்பெய்த ஆருயிர் மருந்து - அகன்ற உள்ளிடத்திலிட்ட அரியவுயிர்
மருந்தாகிய உணவு, அவர் முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன் என -
அவ்வறிஞர்களின் முகத்தைக் கண்டு சுரத்தலைக் காணும் விருப்ப முடையேன் என்று
மணிமேகலை கூற ;
சிதர் - சிதார் எனவும் வழங்கும்.
வயிறு காய்-வயிறு உணவின்றிக் காய்ந்தமையாலாகிய எனலுமாம். அலைத்தற்கு-அலைத்தலால்.
அறத்தின் நீக்கப்பட்டமையின், பாவம் அறங்கடை யெனப்பட்டது; 2"அறன்
கடை நின்றாரு ளெல்லாம்" என்பதூஉங் காண்க. 3
"அகத்தாரே
வாழ்வாரென் றண்ணாந்து நோக்கிப், புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி,
மிகத்தாம் வருந்தி யிருப்பரே மேலைத் தவத்தாற் றவஞ்செய்யாதார்" என்பது
ஈண்டு அறியற்பாலது. மடியாது சென்று என ஒரு
1
குறள். 358. 2
குறள். 142. 3
நாலடி. 31.
|