|
வீரையுமாய
நீவிர், அவ்வையர் ஆயினீர்-இப்பிறப்பில் எனக்குத் தாயர் ஆயினீர், நும்
அடி தொழுதேன் - நும்முடைய அடிகளை வணங்கினேன் ;
தேவி
- மாதவி ; சுதமதியுமாம். தவ்வையர் - தமக்கைமார். அவ்வையர் - தாய்மார்
; மாதவிக்குத் தோழியாகலின் செவிலி யென்பது பற்றிச் சுதமதியையும் தாய்
என்றாள்.
138--46. வாய்வதாக மானிடயாக்கையில் தீவினை அறுக்கும் செய் தவம்
நுமக்கீங்கு-நுங்கட்கு இப்பொழுது மனித உடலால் தீவினைகளை அறுக்கவல்ல செய்தவம்
வாய்ப்புடைத்தாகுக, அறவணவடிகள் தம்பால் பெறுமின் செறிதொடி நல்லீர் உம்
பிறப்பு - செறிந்த வளையல்களை யணிந்த மகளிரே உம் பிறப்பினை அறவணவடிகள்பால்
அறிந்துகொள்ளுமின், ஈங்கிஃது ஆபுத்திரன் கை அமுத சுரபிஎனும் மாபெரும் பாத்திரம்-இங்கிருக்கின்ற
இது ஆபுத்திரன் கையிலிருந்த அமுதசுரபி என்னும் பெயருடைய பெருமைமிக்க பாத்திரமாகும்,
நீயிரும் தொழும் என - இதனை நீவிரும் வணங்குவீர் என்று கூற, தொழுதனர் ஏத்திய
தூமொழி யாரொடும் - வணங்கித் துதித்த மாதவி சுதமதியுடன், பழுதறு மாதவன் பாதம்
படர்கேம் எழுக என எழுந்தனள் இளங்கொடி தான்என்-குற்றமற்ற பெருந்தவமுடைய அறவண
வடிகள் திருவடிகளை வணங்குதற்குச் செல்லுவேம் நீவிரும் எழுக எனவுரைத்து மணிமேகலை
எழுந்தனள் என்க.
செய்தவம் வாய்வதாக எனவும், பிறப்பு பெறுமின்
எனவும் கூட்டுக. தொழுமெனக்கூறி எழுகென எழுந்தனளென்க ;
மணிபல்லவத்தில் தெய்வம் நீங்கிய பின்னர்
மணிமேகலை நோக்கித் திரிய, தீவதிலகை தோன்றி ''யார் நீ'' என்றலும், ''கேளாய்,
என் வரவு ஈது; பயன் இது; அன்னாய், நீ யார்?'' என்றலும் தீவதிலகை உரைக்கும்;
உரைப்பவள், என்றுரைத்தலும், மணிமேகலை விரும்பிப் பீடிகையைத் தொழுது வணங்கிக்
கூடி வலஞ்செய்து நிற்றலும், அவள் கையிற் பாத்திரம் புகுந்தது ; புகுதலும் மகிழ்வெய்தி,
''வாழ்த்தல் என்னாவிற்கடங்காது'' என்றாள்; என்ற ஆயிழை முன்னர்த் தீவதிலகை
உரைக்கும்; உரைப்பவள், ''கண்டனை'' என்றலும், மணிமேகலை ''சுரத்தல் காண்டல்
வேட்கையேன்'' என,
அவளுரைப்ப, மணிமேகலை வணங்கி
ஏத்தி வலங்கொண்டு எழுந்து, மயங்குவோள்
முன்னர்
வந்து தோன்றிக் களைந்து கூறும்; கூறுகின்றவள், தொழுமென, தொழுதேத்திய அவரொடும்
இளங்கொடி எழுந்தனள் என வினை முடிவு செய்க.
பாத்திரம் பெற்ற காதை முற்றிற்று.
|