மணிமேகலையும் உயிர்களின் பசித் துயர்கெடப் பாத்திரத்தை யெடுத்தனள். (இதில்
புத்தர் தோன்றுங்காலத்து உலகில் இன்னின்ன நிகழுமெனக் கூறியிருப்பன அறிந்து
இன்புறத்தக்கவை.)]
5
10
15
20
25
30
ஆங்கவர் தம்முடன் அறவண அடிகள்
யாங்குளர் என்றே இளங்கொடி வினாஅய்
நரைமுதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரைமூ தாளன் உறைவிடம் குறுகி
மைம்மலர்க் குழலி மாதவன் திருந்தடி
மும்முறை வணங்கி முறையுளி யேத்திப்
புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதய குமரனாங் குற்றுரை செய்ததும்
மணிமே கலாதெய்வமும் மணிபல் லவத்திடை
அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கத் தீவகத் தறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனைக்
களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும்
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்