நறுமலர்க் கோதாய் நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையில் உரைத்த
பெருமைசால் நல்லறம் பெருகா தாகி
இறுதியில் நற்கதி செல்லும் பெருவழி,
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்துகண்ணடைத்தாங்குச்
செயிர்வழங்கு தீக்கதி திறந்து கல்லென்று
உயிர்வழங்கு பெருநெறி ஒருதிறம் பட்டது
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டென உணர்தல் அல்லதி யாவதும்
கண்டினிது விளங்காக் காட்சி போன்றது