அளவாச் சிறுசெவி யளப்பரு நல்லறம்
உளமலி யுவகையொ டுயிர்கொளப் புகூஉம
கதிரோன் தோன்றுங் காலை ஆங்கவன்
அவிரொளி காட்டும் மணியே போன்று
மைத்திருள் கூர்ந்த மனமாசு தீரப்
புத்த ஞாயிறு தோன்றுங் காலைத
திங்களும் ஞாயிறும் தீங்குறா விளங்கத
தங்கா நாண்மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மாநிலம் வளம்படும்
ஊனுடை உயிர்கள் உறுதுயர் காணா
வளிவலக் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம்
கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்
பறவை பயன்றுய்த் துறைபதி நீங்கா
விலங்கு மக்களும் வரூஉப்பகை நீங்கும்