பக்கம் எண் :

பக்கம் எண் :164

Manimegalai-Book Content
12.அறவணர்த் தொழுத காதை
 

மூதுரை - அறிவு மேம்பட்ட உரை. முறையுளி - முறையால் ; உளி : மூன்றனுருபின் பொருட்டு.

7--20.புதுமலர்ச் சோலை பொருந்திய வண்ணமும் - தான் மலர் கொய்யுமாறு உவவனத்தின்கட் சேர்ந்தனையும், உதயகுமரன் ஆங்கு உற்று உரை செய்ததும் - உதயகுமரன் ஆண்டு வந்து மொழிந்தனையும், மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை அணியிழை தன்னை அகற்றிய வண்ணமும் - அப்பொழுது மணிமேகலா தெய்வம் தோன்றித் தன்னை மணிபல்லத்தின்கண் கொண்டு சென்றதனையும், ஆங்கத் தீவகத்து அறவோன் ஆசனம் - அத் தீவின்கணுள்ள புத்தன் பாதபீடம்; நீங்கிய பிறப்பு நேரிழைக் களித்ததும்-சென்ற பிறப்பைத் தனக்கு உணர்த்தி யருளினதையும், அளித்த பிறப்பின் ஆகிய கணவனை - அங்ஙனம் உணர்த்திய பழம் பிறப்பிற் கணவனா யிருந்தோனை, களிக்கயல் நெடுங்கட் கடவுளிற் பெற்றதும் - களிப்பு மிக்க கயல் மீனனைய நீண்ட கண்களையுடைய மணிமேகலா தெய்வத்தான் அறிந்தனையும், தவ்வையராகிய தாரையும் வீரையும் - முன்பிறந்தோராகிய தாரையும் வீரையும், வெவ்வினை உருப்ப விளிந்து கேடு எய்தி - தீவினை உருத்து வந்தூட்டுதலான் இறந்தெழிந்து, மாதவி ஆகியும்சுதமதி ஆகியும் - மாதவியாயும் சுதமதியாயும், கோதை அம்சாயல் நின்னொடுங் கூடினர் - அழகிய கூந்தலையும் மென்மையையுமுடைய நின்னொடும் கூடினர், ஆங்கவர் தம் திறம் அறவணன் தன்பால் - அவர்கள் வரலாற்றினை அறவணவடிகளிடம், பூங்கொடி நல்லாய் கேள் என்று உரைத்ததும் - பூங்கொடி போலும் நங்கையே கேட்பாயாக என்று கூறியதனையும் ;

தன்னை படர்க்கையில் வைத்து, அணியிழை தன்னை என்பும், நேரிழைக்கு என்றும் கூறினாள். ''நெடுங்கண்'' திரியா திருப்பின், மணி மேகலையெனப் பொருள்படும். '' தவ்வையராகிய'' என்பது முதல் ''கேள்'' என்பது காறும் மணிமேகலா தெய்வத்தின் கூற்றினை மணிமேகலை கொண்டு மொழிந்தது.

21--30.உரைத்த பூங்கொடி-அங்ஙனங் கூறிய பூங்கொடி போலும் மணிமேகலா தெய்வம், ஒரு மூன்று மந்திரம் - மூன்று மந்திரங்களை, தனக்கு உரை செய்து தான் ஏகிய வண்ணமும் - தனக்கு அருளிச் செய்து அத்தெய்வம் சென்ற திறத்தையும், தெய்வம் போயபின் - மணிமேகலா தெய்வஞ் சென்ற பின்னர், தீவதிலகையும் ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும் - தீவதிலகை விரைவாகத் தோன்றி அருளொடும் எய்தியதனையும், அடைந்த தெய்வம்-அடைந்த தெய்வமாகிய தீவதிலகை, ஆபுத்திரன் கை வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும் - ஆபுத்திரன் கையிலிருந்த வணங்குதற்குரிய சிறந்த பாத்திரத்தை நால்வகை