வாய்மையுடன் அளித்ததனையும், ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால் கேள் என்று
உரைத்து - ஆபுத்திரனது வரலாற்றை அறவணவடிகளிடம் கேட்பாயாக என்று கூறி, கிளர்ஒளி
மாதெய்வம் -விளங்குகின்ற பேரொளியினையுடைய பெருமை பொருந்திய
அத்தெய்வம், போகென
மடந்தை போந்த வண்ணமும் - நின் பதியிடைப் போவாய் என உரைப்பத் தான்
மீண்டுவந்த தன்மையையும், மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும் - அறவணவடிகளை
வணங்கி மொழிதலும் ;
மூன்று மந்திரம் - வேற்த்றுரு வெய்தவும்,
அந்தரய் திரியவும், பசி யொழியவும் செய்யும் மந்திரங்கள் (10 : 80--91:)
ஐயென - வியக்குமாறு எனவுமாம். தோன்றி-புலப்பட்டு. வாய்மையின் - வாய்மையோடு.
31--44மணிமேகலை உரை மாதவன் கேட்டு - அறவணவடிகள் மணிமேகலையின்
மொழியைக் கேட்டு, தணியா இன்பம் தலைத்தலை மேல்வர -குறையாத பேரின்பம்
மேன்மேல் மிகா நிற்க, பொற்றொடி மாதர் நற்றிடம் சிறக்க-பொன் வளையல்களையணிந்த
மாதே நினக்கு நல்ல கூறுபாடுகள் சிறப்பனவாக, உற்றுணர்வாய் நீ இவர் திறம்
உரைக்கேன்-இவர்கள் வரலாற்றைக் கூறுவேன் நீ அதனைக் கேட்டு அறிவாயாக, நின்நெடுந்
தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த - நின் பெருந் தெய்வம் நினக்கு எடுத்து கூறிய
அந்நாள் அன்றியும் - அந் நாளிற் சென்றதல் லாமலும், அருவினை கழூஉம் ஆதி
முதல்வன் அடியிணையாகிய - அரிய வினைகளைப் போக்கும் புத்தன் திருவடியிணைகள்
பொருந்திய, பாதபங்கயமலை பரவிச் செல்வேன்-பாதபங்கயமலையைப் பணிந்து செல்லுவேன்,
கச்சயம் ஆளும் கழற்கால் வேந்தன் துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழிற் கண்டேன்
- கச்சய நகரத்தை ஆண்டுவந்த வீரக் கழலணிந்த கால்களையுடைய துச்சயன் என்ற
மன்னனை ஒரு பொழிலினிடத்துக் கண்டேன், மாபெருந் தானை மன்ன நின்னொடும்
தேவியர் தமக்கும் தீதின்றோ என - மிகப் பெரிய சேனைகளையுடைய அரசே நீயும்நின்
தேவியரும் தீதின்றி இருக்கின்றீரோ என வினவ, அழிதகவு உள்ளமொடு அரற்றின்ன்
ஆகி - அழிந்த உள்ளத்தோடு புலம்பியவனாய், ஒளியிழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
- ஒள்ளிய அணிகலனையுடைய மனைவியர்க்கு நேர்ந்ததை உரைக்கின்றவன் ;
மாதர்
: விளி. செல்வேன் பெயர். கண்டேன் - கண்டு : முற்றெச்சம்.
45--54 புதுக்கோள் யானைமுன் போற்றாது சென்று மதுக்களி மயக்கத்து வீரை
மாய்ந்ததூஉம் - புதிதாகப் பிடித்துக்கொண்டு வரப்பட்ட யானையின் முன்னே
மதுவுண்ட களிப்பினாலாகிய
|