அதன் பின்பு, பெருங்குள மருங்கில்
சுருங்கைச் சிறுவழி - பெரிய குளத்திலுள்ள மதகாகிய சிறிய வழியில், இரும்
பெரு நீத்தம் புகுவது போல - மிகப் பெரிய வெள்ளம் புகுவதைப்போல, அளவாச்
சிறுசெவி - பேரளவில்லாத சிறிய செவிகளின் வழியே, அளப்பரு நல்லறம் உளம்
மலி உவகையொடு உயிர் கொளப் புகூஉம் - அளத்தற்கரிய நல்லறங்கள் உள்ளத்தில்
நிறைந்த மகிழ்ச்சியோடு உயிர்கள் ஏற்றுக்கொள்ளும்படி புகாநிற்கும்;
துடிதலோகம் - உலகம் முப்பத்தொன்றனுள் ஒன்பதாவது
; தெய்வலோகம் ஆறனுள் நான்காவது. மிக்கோன்-சிறந்தவன்; இவன் பெயர்
பிரபாபாலன் என்பர். ஈண்டுக் குறிக்கப்பட்ட ஆண்டு இன்ன அப்தத்தைச் சேர்ந்ததென்று
தெரியவில்லை. வளவா எனப் பிரித்து வளமில்லாத என்றுரைத்தலுமாம். சிறு செவிப்
புகூஉம் என்க.
83--98. கதிரோன் தோன்றும் காலை ஆங்கவன் அவிர் ஒளி காட்டும்
மணியே போன்று - ஞாயிறு தோன்றும் பொழுதில் அஞ் ஞாயிற்றினது விளங்குகின்ற
ஒளியினைக் காட்டும் சூரிய காந்தம்போல, மைத்து இருள் கூர்ந்த மனமாசு தீர
- கறுத்து இருண்மிக்க மனத்தின்கண் உள்ள குற்றம் நீங்க, புத்தஞாயிறு தோன்றும்
காலை - புத்தனாகிய ஞாயிறு தோன்றும்பொழுது, திங்களும் ஞாயிறும் தீங்குறா
விளங்க - மதியும் பரிதியும் தீமையுறாமல் விளங்க, தங்கா நாண்மீன் தகைமையின்
நடக்கும் - ஓரிடத்தில் நிலையுதலில்லாத நாண்மீன்கள் தக்கவாறு நடக்கும்,
வானம் பொய்யாது - முகில் மழை பெய்வதிற் பொய்படாது, மாநிலம் வளம்படும்
- பெரிய பூமி வளஞ்சிறக்கும், ஊன் உடை உயிர்கள் உறுதுயர் காணா - ஊனினையுடைய
உயிர்கள் துயரமடைதலைக் காணா, வளிவலம் கொட்கும் - காற்று வலமாகச் சுழலும்,
மாதிரம் வளம்படும் - திசைகள் செழுமையுறும், நளியிரு முந்நீர் நலம்பல தரூஉம்
- செறிந்த நீரினையுடைய பெரிய கடல் முத்து முதலிய பல வளங்களைக் கொடுக்கும்,
கறவை கன்று ஆர்த்திக் கலநிறைபொழியும் - பசுக்கள் கன்றுகளைஉண்ணச் செய்து
கறவைக்கலம் நிறைந்து வழியுமாறு பால் பொழியும், பறவை பயன் துய்த்து உறைபதி
நீங்க - பறவைகள் பயனை நுகர்ந்து தாம் வாழ்விடங்களிலிருந்து நீங்கா, விலங்கும்
மக்களும் வெரூஉப்பகை நீங்கும் - விலங்கினமும் மக்களினமும் தம்முள் அஞ்சுதற்குக்
காரணமா, கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் மன்னுயிர் பெறா அ-கூன்
வடிவும் குறகிய பகைமையில்நீங்கும், கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
- கலங்குதற்குக் காரணமாகிய துன்பத்தை நரகரினமும் பேயும் விட்டொழியும்ள்
வடிவும் ஊமையும் செவிடும் விலங்குருவமும் அறிவின்றி மயங்கி யிருத்தலுமாதிய
பிறப்புக்களை மக்களுயிர் பெறமாட்ட
|