பக்கம் எண் :173 |
|
Manimegalai-Book Content
13.
ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
|
20
25
30
35
40
45
50
|
கழுமிய துன்பமொடு கண்ணீ ருகுத்தாங்,
காமக னல்லன் என்மகன் என்றே
காதலி தன்னொடு கைதொழு தெடுத்து
நம்பி பிறந்தான் பொலிகநங் கிளையெனத்
தம்பதிப் பெயர்ந்து தமரொடுங் கூடி
மார்பிடை முந்நூல் வளையா முன்னர்
நாவிடை நன்னூல் நன்கனம் நவிற்றி
ஓத்துடை யந்தணர்க் கொப்பவை யெல்லாம்
நாத்தொலை வின்றி நன்கனம் அறிந்தபின்
அப்பதி தன்னுளோர் அந்தணன் மனைவயின்
புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்
குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி
வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக
கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி
வலையிடைப் பட்ட மானே போன்றாங்
கஞ்சிநின் றழைக்கும் ஆத்துயர் கண்டு
நெஞ்சுநடுக் குற்று நெடுங்கணீ ருகுத்துக்
கள்ள வினையிற் கடுந்துயர் பாழ்பட
நள்ளிருள் கொண்டு நடக்குவன் என்னும்
உள்ளம் கரந்தாங் கொருபுடை ஒதுங்கி
அல்லிடை யாக்கொண் டப்பதி அகன்றோன
கல்லதர் அத்தம் கடவா நின்றுழி
அடர்க்குறு மாக்களொ டந்தண ரெல்லாம்
கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி
ஆகொண் டிந்த ஆரிடைக் கழிய
நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்
புலைச்சிறு மகனே போக்கப் படுதியென்
றலைக்கோ லதனால் அறைந்தனர் கேட்ப
ஆட்டிநின் றலைக்கும் அந்தண ருவாத்தியைக்
கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக்
காட்டிடை நல்ஆக் கதழ்ந்து கிளர்ந்தோட
ஆபுத் திரன்தான் ஆங்கவர்க் குரைப்போன்
நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின
விடுநில மருங்கின் படுபுல் லார்ந்து
|
|
|
|
|