முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :174
Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
55
60
65
70
75
80
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம
பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை
முதுமறை அந்தணிர் முன்னிய துரைமோ
பொன்னணி நேமி வலங்கொள்சக் கரக்கை
மன்னுயிர் முதல்வன் மகனெமக் கருளிய
அருமறை நன்னூல் அறியா திகழ்ந்தனை
தெருமரல் உள்ளத்துச் சிறியை நீயவ்
ஆமக னாதற் தொத்தனை அறியாய்
நீமகன் அல்லாய் கேளென இகழ்தலும்
ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி
புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்
நரிமகன் அல்லனோ கேச கம்பளன்
ஈங்கிவர் நுங்குலத் திருடி கணங்களென்
றோங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலு முண்டால்
ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ
நான்மறை மாக்காள் நன்னூ லகத்தென
ஆங்கவர் தம்முளோர் அந்தணன் உரைக்கும்
ஈங்கிவன் தன்பிறப் பியானறி குவனென
நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்
வடமொழி யாட்டி மறைமுறை யெய்திக்
குமரி பாதங் கொள்கையின் வணங்கித்
தமரில் தீர்ந்த சாலியென் போள்தனை
யாது நின்னூர் ஈங்கென் வரவென
மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும்
வார ணாசியோர் மாமறை முதல்வன்
ஆரண உவாத்தி யரும்பெறல் மனைவியான்
பார்ப்பார்க் கொவ்வாப் பண்பின் ஒழுகிக்
காப்புக் கடைகழிந்து கணவனை
1
யிகழ்ந்தேன்
2
எற்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு
தெற்கண் குமரி யாடிய வருவேன்
பொற்றேர்ச் செழியன் கொற்கையம் பேரூர்க்
1
இழந்தேன்.
2
எறிபயம்.
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்