பக்கம் எண் :

பக்கம் எண் :175

Manimegalai-Book Content
13. ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை
 


85





90





95





100





105





110




115

காவதங் கடந்து கோவலர் இருக்கையின

ஈன்ற குழவிக் கிரங்கே னாகித்
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்
செல்கதி யுண்டோ தீவினை யேற்கென்
றல்லலுற் றழுத அவள்மகன் ஈங்கிவன்
சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்

புல்லலோம் பன்மின் புலைமகன் இவனென
ஆபுத் திரன்பின் பமர்நகை செய்து
மாமறை மாக்கள் வருகுலங் கேண்மோ
முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய
கடவுட் கணிகை காதலஞ் சிறுவர்

அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்
புரிநூன் மார்பீர் பொய்யுரை யாமோ
சாலிக் குண்டோ தவறென வுரைத்து
நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
ஓதல் அந்தணர்க் கொவ்வான் என்றே

தாதை பூதியுந் தன்மனை கடிதர
ஆகவர் கள்வனென் றந்தணர் உறைதரும்
கிராம மெங்கணுங் கடிஞையிற் கல்லிட
மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்
தக்கண மதுரை தான்சென் றெய்திச்

சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்,
தந்தின் முன்றில் அம்பலப் பீடிகைத்
தங்கினன் வதிந்தத் தக்கணப் பேரூர்
ஐயக் கடிஞை கையின் ஏந்தி
மையறு சிறப்பின் மனைதொறு மறுகிக்

காணார் கேளார் கால்முடப் பட்டோர்
பேணுந ரில்லோர் பிணிநடுக் குற்றோர
யாவரும் வருகவென் றிசைத்துட னூட்டி
உண்டொழி மிச்சிலுண் டோடுதலை மடுத்துக்
கண்படை கொள்ளுங் காவலன் றானென்.

உரை

1--10 மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய - பெருமை மிக்க இவ் வமுதசுரபியை நினக்குக் கொடுத்த, ஆபுத்திரன் திறம்