வருத்தமுற்று, கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி - கொலைத் தொழில்
புரியும் வேடருடைய வில்லிற்குப் பயந்து, வலையிடைப்பட்ட மானே போன்று -
வலையின்கண் அகப்பட்ட மானைப்போல, ஆங்கு அஞ்சி நின்று அழைக்கும் ஆ துயர்
கண்டு - ஆண்டு அச்சத்துடன் நின்று கூப்பிடும் பசுவின் துன்பத்தைக் கண்டு,
நெஞ்சு நடுக்குற்று நெடுங்கணீர் உகுத்து-உள்ளம் நடு நடுங்கிமிக்க கண்ணீரைச்
சொரிந்து ;
புலை-புன்மை; கீழ்மையுடைய ஊன்
தின்றலுக்காயிற்று. வேள்வி யென்பதும் வேள்விச்சாலைக்கு ஆகுபெயர். பகையை
அஞ்சியென இரண்டாவது விரித்தலுமாம். புலம்பி - வருத்தமுற்று. கொடுமரம்-
வில் ; அம்பெய்தலை யுணர்த்தி நின்றது.
35--9.
கள்ளவினையில்
கடுந்துயர் பாழ்பட - இப்பசுவினது மிக்க துன்பம் இல்லையாம்படி திருட்டுத்தொழிலால்,
நல்லிருள் கொண்டு நடக்குவன் என்னும் - செறிந்த இருளின்கண் இதனைக்கொண்டு
செல்லுவேன் என்கின்ற, உள்ளம் கரந்து ஆங்கு ஒருபுடை ஒதுங்கி - தன் எண்ணத்தை
மறைத்து அவ்விடத்தில் ஒருபக்கம் மறைந்திருந்து, அல்லிடை ஆக்கொண்டு அப்பதி
அகன்றோன் - இரவில் பசுவைப்பற்றி அவ்வூரைவிட்டு நீங்கினோன், கல்அதர்
அத்தம் கடவா நின்றுழி-பருக்கைக் கற்கள் பொருந்திய சின்னெறியை யுடைய
அருவழியைத் தாண்டிச் செல்லும்பொழுது ;
நள்ளிருள் - செறிந்தவிருள் ;
நளி யென்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது. பாழ்பட வினையிற்கொண்டு எனக்
கூட்டுக. என்னும்உள்ள முடையனாய் அதனைக் கரந்து என விரித்துரைக்க.
1
''''கல்லத
ரத்தங் கடக்க'''' என்றார் இளங்கோவடிகளும்.
40--5
. அடர்க்குறு
மாக்களொடு அந்தனர் எல்லாம்-நெருக்குதலைச் செய்யும் முழுவலியுடைய மக்களோடு
அந்தணர் அனைவரும் கூடி, கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி - அருநெறியில்
அவனைப் பசுவொடு பிடித்துக்கொண்டு, ஆ கொண்டு இந்த ஆரிடைக்கழிய- பசுவைத்
திருடிக்கொண்டு இந்த அரிய வழியிலே நீங்குமாறு, நீ மக னல்லாய் நிகழ்ந்ததை
உரையாய்-மகனல்லையாகிய நீ நிகழ்ந்த காரணத்தைக் கூறுவாயானால், புலைச்
சிறு மகனே போக்கப்படுதி என்று - புலைத் தொழிலையுடைய கீழ்மகனே விலக்கப்படுவாய்
என்று, அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப-வருத்துதலைச் செய்யும் கோலினால்
அடித்துக் கேட்க ;
அடர்க்குறு - பகையாயினாரை நெருக்கி வருத்துதலைச்
செய்யும். வேள்விப் பசுவைக் கவர்ந்தமையின் புலைச்சிறுமகன் என்றார். உரையாய்
உரைப்பின் போக்கப்படுதி யென்க. போக்கப்படுதல்-தண்டத்தினின்றும் அகற்றப்படுதல்.
மகனல்லாய் - மகனாதற் றன்மை உடையை
1
சிலப். 14 : 57.
|