யல்லாய் ; மக்கட்டன்மை யில்லாய்
;
1
"மகனல்லை மன்ற வினி"
2
"மகனல்லான பெற்ற
மகன்" என்பன காண்க. குறுமாக்கள் எனப் பிரித்தலும், நீசமகனல்லாய் எனப்
பாடங்கொள்ளலும் ஈண்டைக்குப் பொருந்துவன அல்ல.
46--8.ஆட்டி நின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியை - மிகவும் வருத்திக்கொண்டு
நின்ற பார்ப்பன உவாத்தியை, கோட்டினில் குத்திக் குடர் புய்த் துறுத்து
- கொம்பினால் குத்திக் குடரைப் பிடுங்கி, காட்டிடை நல்ஆகதழ்ந்து
கிளர்ந்துஓட-காட்டின்கண்
அந் நல்ல பசுவானது விரைந்தெழுந்து ஓட ;
ஆட்டி அலைக்கும் : ஒரு பொருட் பன்மொழி.
புய்த்துறத்து -பறித்தலைச் செய்து;
3
"புய்த்தெறி
கரும்பின் விடுகழை" என்பது காண்க. கதழ்ந்து-விரைந்து; கதழ்வு என்னும்
உரிச்சொல்லடியாகப் பிறந்தது.
49--56.ஆபுத்திரன் தான் ஆங்கவர்க்கு உரைப்போன்-ஆபுத்திரன் அம்
மறையோர்க்குக் கூறுகின்றவன், நோவன செய்யன்மின் - வருந்துதற் குரியவற்றைச்
செய்யாதீர். நொடிவன கேண்மின்- யான் கூறுவதனைக் கேட்பீராக, விடுநில மருங்கின்
படுபுல் ஆர்ந்து- அரசனால் விடப்பட்ட மேய்புலத்தில் தானே உண்டாகிய புற்களை
மேய்ந்து, பிறந்தநாள் தொட்டும் சிறந்த தன் தீம்பால் - நாம் பிறந்தநாள்
தொடங்கிச் சிறப்புடைய தனது இனிய பாலை, அறம் தரு நெஞ்சோடு அருள்சுரந்து
ஊட்டும் - அறம் பொருந்திய உள்ளத்தோடும் அருண்மிகுந்து உண்பிக்கும், இதனொடு
வந்த செற்றம் என்னை - இப் பசுவினிடம் நுமக்குண்டாய சினம் யாது, முதுமறை
அந்தணிர் முன்னியது உரைமோ - தொன்மறை யுணர்ந்த அந்தணர்கள் நும் எண்ணத்தைக்
கூறுவீர் என ;
விடுநிலம் - பயிர் செய்யாது விட்ட தரிசுநிலமுமாம்.
இதனொடு : உருபு மயக்கம். செற்றம் - பகைமை நெடுங்காலம் நிகழ்வது ; அதனைக்
கோறல் துணிந்தனராகலின் ''செற்ற மென்னை'' என்றான். இதன் பொருட்டு மக்கட்கு
எத்துணையும் உழைப்பும் கேடும் இல்லையென்பான், ''விடுநில மருங்கிற் படுபுல்
லார்ந்து'' என்றும், மக்கள் யாவரும் குழவியாய் உதித்த ஞான்றுதொட்டு உயிர்
துறக்குங்காறும் என்பான், ''பிறந்தநாள் தொட்டும்'' என்றும், இனிமையினும்உடற
குறுதி பயத்தலினும் மேம்பட்டதென்பான் ''சிறந்த தன் தீம்பால்'' என்றும்,
கைம்மாறு கருதாது இரக்கத்தால் தானே உண்பிப்பதென்பான், ''அருள் சுரந் தூட்டும்''
என்றும், இவ்வாற்றால் தாய் போல்வதாகிய இதனைக் கோறல் கருதிய நும் வன்கண்மை
இருந்தவாறென்னென்பான், இதனொடு வந்த செற்ற மென்னை'' என்றுங் கூறினான்.
என வென்று ஒரு சொல் வருவிக்க.
1
கலி. பாலை, 19: 6.
2
கலி. மருதம்,
19: 13.
3
புறம்.28
|