திருவடிகளை
முறைமையால் வணக்கஞ் செய்து, தமரில் தீர்ந்த சாலி என்போள்தனை - தனக்குச்
சிறந்தோரினின்றும் நீங்கிய சாலி என்பவளை, யாதி நின் ஊர் ஈங்கு என்
வரவு என - நின் ஊர் யாது நீ ஈண்டு வந்த காரணம் என்ன என்று கேட்க,
மாமறையாட்டி வருதிறம் உரைக்கும் - அம் மறையவள் தான் வந்த வரலாற்றைக்
கூறுபவள் ;
நடவை - வழி ; வழிச்சேறல். நல்கூர்தல்
- ஈண்டு இளைத்தல் ; 1
''''நல்கூர்
நுசுப்பினை'''' என முன் வந்தமையும் காண்க. குமரி - குமரிக் கடலின் மருங்குள்ள
தெய்வம் ; கன்னி ; பகவதி. கொள்கை - நோன்புமாம். வடமொழியாட்டி -
பார்ப்பனி ; பார்ப்பனரை ''''வடமொழியாளர்'''' (6 : 40) என முன் கூறினமையுங்
காண்க. தீர்ந்து வணங்கிய என விகுதி பிரித்துக் கூட்டுக. தமரிற் றீர்ந்து
வணங்கிய வடமொழியாட்டியாகிய சாலி யென்க.
78-83. வாரணாசி ஓர் மாமறை முதல்வன் ஆரண உவாத்தி அரும் பெறல்
மனை யான் - காசிப்பதியிலுள்ள வேதமோதுவிக்கும் உவாத்தியாகிய அந்தணன்
ஒருவனது பெறற்கரிய மனைவி யாவேன் யான், பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின்
ஒழுகி - அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி, காப்புக் கடை கழிந்து கணவனை
இகழ்ந்தேன்-காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தேன், எற்பயம்
உடைமையின்-இரவின் அச்சமுடைமையால், இரியல் மாக்களொடு - கெடுதலுற்ற மக்களுடன்,
தெற்கண் குமரி ஆடிய வருவேன் - தென்றிசைக் குமரியில் நீராடும் பொருட்டு
வருவேன் ;
காப்புக்கடை கழிந்து என்பதற்கு முன்பு
(13 : 5) உரைத்தமை காண்க. ''இழந்தேனெறிபய முடைமையின்'' என்றும் பாடம்
காணப்படும். இரியல் மாக்கள் என்பதனை இரட்டுறமொழிதலாகக் கொண்டு, விரைந்ே்தகு
மாக்கள் என்றும்
உரைத்திடுக
84-91.பொற்றேர்ச் செழியன்
கொற்கையம் பேரூர்க் காவதம் கடந்து கோவலர் இருக்கையின் - பொற்றேரினை
யுடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஒரு காவதம் கடந்த பின்னர் ஆயர்களுடைய
இருப்பிடத்தில், ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகி-ஈன்ற சிறு குழவிக்கு இரங்காதவளாய்;
தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன் - கண்காணாத தோட்டமொன்றில்
இட்டு வந்தேன், செல்கதி உண்டோ தீவினையேற்கு என்று - இத்தகைய தீவினையேனுக்குச்
செல்கதியும் உண்டோ என்று, அல்லல் உற்று அழுத அவள் மகன் ஈங்கிவன்-துன்பமுற்று
அழுத அச் சாலியின் மகன் இவன், சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்-இதனைக்
கூறாமலிருந்தேன் அங்ஙனம் கூறுவதால் பயன் இல்லாமையின்,
1
மணி. 10 : 30.
|