புல்லல் ஓம்பன்மின் புலைமகன்
இவன் என - இவனைத் தீண்டா தொழிவீராக அசுத்தமுள்ள கீழ்மகனிவன்
என்று கூற ;
ஈன்றேன் ; அங்ஙனம் ஈன்ற குழவிக்கு எனவும்,
அழுதாள் ; அங்ஙனம் அழுத அவள் மகன் எனவும் அறுத்துரைக்க. செல்கதி-அடையக்
கடவதாகிய நற்கதி. அந்தணன் உரைப்பவன் புலைமகன் இவனென்று கூறவென்க. ஓம்பன்மின்
- பாதுகாவாதீர் ; செய்யாதீர் என்றபடி.
92-9. ஆ புத்திரன் பின்பு அமர் நகை செய்து - ஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர்
விருப்பத்துடன் சிரித்து, மாமறை மாக்கள் வருகுலம் கேண்மோ - பெரிய மறைநூலுணர்ந்த
அந்தணர்கள் வந்த மரபினைக் கேளும், முதுமறை முதல்வன்
முன்னர்த்
தோன்றிய கடவுட் கணிகை காதலஞ் சிறுவர் - பழமறை முதல்வனாகிய பிரமனுக்குத்
தெய்வக் கணிகையாகிய திலோத்தமை யினிடமாக முன்பு தோன்றிய காதற்
சிறுவரல்லரோ, அருமறை முதல்வர் அந்தணர் இருவரும் - அரிய மறை முதல்வர்களாகிய
முனிவர் இருவரும், புரிநூன் மார்பீர் பொய்யுரையாமோ-முப்புரி நூலணிந்த மார்பினை
யுடையீர் இது பொய் மொழியோ, சாலிக்கு உண்டோ தவறு என உரைத்து - இங்ஙனமிருப்பச்
சாலிக்குக் குற்றம் உண்டோ என்று கூறி, நான்மறை மாக்களை நகுவனன் நிற்ப
- நான்மறை யந்தணரை எள்ளிச் சிரித்து நிற்க ;
அமர்
நகை-பொருந்திய நகையுமாம். கேண்மோ : கேளும் என்னும் ஏவற்பன்மை உகரங்கெட்டு
ஓகாரம் பெற்று வந்தது. அந்தணர் இருவர் - வசிட்டனும் அகத்தியனும் ; பிரமன்
திலோத்தமையைக் கண்ட பொழுதில் வசிட்டனும் அகத்தியனும் கலசத்திற் றோன்றின
ரென்பர். அந்தண ரிருவரும் காதலஞ் சிறுவர் என்க.
100-108.
ஓதல்
அந்தணர்க்கு ஒவ்வான் என்றே - மறையோதும் அந்தணர்கட்கு இவன் ஒவ்வாதவன்
என்று, தாதை பூதியும் தன் மனை கடிதர - தந்தையாகிய பூதியும் தன் இல்லத்தினின்றும்
நீக்க, ஆ கவர் கள்வன் என்று-பசுவைக் கவர்ந்த திருடன் என்று, அந்தணர் உறை
தரும் - மறையவர்கள் வாழ்கின்ற, கிராமம் எங்கணும் - ஊர்களிலெல்லாம்,
கடிஞையில் கல்லிட - இவனது பிச்சைப் பாத்திரத்தில் கற்களை இட, மிக்க சொல்வத்து
விளங்கி யோர் வாழும் - பெருஞ் செல்வத்தான் விளக்கமுற்றோர் வாழ்கின்ற,
தக்கண மதுரை தான் சென்று எய்தி - தெற்கின்கண உள்ள மதுரையைத் தான் சென்று
அடைந்து, சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து அந்தில் முன்றில்-சிந்தாதேவியின்
அழகிய கோயில் வாயிலிலுள்ள, அம்பலப் பீடிகை தங்கினன் வதிந்து!- அம்பலமாகிய
பீடிகையிலே தங்கியிருந்து ;
அந்தணர்க்கு-அந்தணருடன் கூடி யிருத்தற்கு. கடிஞை-பிச்சை
யேற்கும்கலம். உலகிலே கடிஞையிற் கல்லிடுவார் எஞ்ஞான்றும் இலரென்பர் ;
|