பக்கம் எண் :

பக்கம் எண் :185

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 
நிற்க, அதுகேட்டு யாவரும் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். உண்போரைப் பெறாமையால் அவன் பெருஞ் செல்வத்தை யிழந்தோர் போல வருந்தித் தனியே செல்லுகையில், மரக்கலத்தில் வந்த சிலர் அவனைக் கண்டு, ''சாவக நாட்டிலே மழை யின்மையால் உயிர்கள் பெரும்பாலும் பசியால் இறந்தன'' என்று கூறினர். அது கேட்டலும் அந்நாட்டிற்குச் செல்ல நினைந்து அவன் ஒரு கப்பலில் ஏறினன் அக்கப்பல் சென்று மணிபல்லவத்தினருகே ஒருநாள் தங்கிற்று: அவன் அத்தீவில் இறங்கினன். இறங்கியவன். ஏறிவிட்டானென எண்ணி, மீகான் இருளில் அக்கப்பலை வேறிடத்திற்குச் செலுத்திப்போயினன். அது தெரிந்து ஆபுத்திரன் மிக்க வருத்தமடைந்து, ''யாருமில்லாதஇத் தீவில் பலர்க்கு உணவளிக்கும் மாபெரும் பாத்திரத்தை வைத்துக் கொண்டு யான் மட்டும் உயிரோம்பி யிரேன்'' என எண்ணி அதனைத் தொழுது, ''ஆண்டிற்கொரு முறை தோன்றுவாயாக'' என்று கூறி அதனைக் கோமுகிப் பொய்கையில் விடுபவன், ''அருளறம் பூண்டு உயிர்களைப் பாதுகாப்போர் யாரேனும் வரின் அவர் கையிற் புகுக'' என்று சொல்லி விட்டுவிட்டு, தான் பட்டினியிருந்து உயிர் துறப்பானாயினான். அப்பொழுது அங்கே சென்ற யான் அதனைக் கண்டு, ''நீ யாது துன்ப முற்றனை'' என்று கேட்க, அவன் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, மணிபல்லவத்தில் உடம்பை வீழ்த்திவிட்டுப் பல்லுயிர்களையும் பாதுகாக்கும் எண்ணத்துடன் சென்று சாவகநாட் டரசனுடைய ஆனின்வயிற்றிலுதித்தனன்.]






5





10





15

ஆங்கவற் கொருநாள் அம்பலப் பீடிகைப்,
பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்
மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்
தாரிடை உழந்தோர் அம்பல மரீஇத்
துயில்வோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி

வயிறுகாய் பெரும்பசி மலைக்கும் என்றலும்
ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன்
ஆற்றுவது காணான் ஆரஞர் எய்தக்
கேளிது மாதோ கெடுகநின் தீதென
யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்துத்

தேவி சிந்தா விளக்குத் தோன்றி
ஏடா அழியல் எழுந்திது கொள்ளாய்
நாடுவறங் கூரினுமிவ் வோடுவறங் கூராது
வாங்குநர் கையகம் வருந்துதல் அல்லது,
தான்தொலை வில்லாத் தகைமைய தென்றே

தன்கைப் பாத்திரம் அவன்கைக் கொடுத்தலும்,