பக்கம் எண் :

பக்கம் எண் :186

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை




20





25





30





35





40





45





50

சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி
ஏனோர் உற்ற இடர்களை வாயெனத்

தான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி
ஆங்கவர் பசிதீர்த் தந்நாள் தொட்டு
வாங்குகை வருந்த மன்னுயிர் ஓம்பலின்
மக்களும் மாவும் மரஞ்சேர் பறவையும்
தொக்குடன் ஈண்டிச் சூழ்ந்தன விடாஅ

பழுமரத் தீண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடையின் றொலிப்ப
ஈண்டுநீர் ஞாலத் திவன்செயல் இந்திரன்
பாண்டு கம்பளந் துளக்கிய தாகலின்
தளர்ந்த நடையின் தண்டிகால் ஊன்றி

வளைந்த யாக்கையோர் மறையோ னாகி
மாயிரு ஞாலத்து மன்னுயிர் ஓம்பும்
ஆருயிர் முதல்வன் தன்முன் தோன்றி
இந்திரன் வந்தேன் யாது நின்கருத்து
உன்பெரும் தானத் துறுபயன் கொள்கென

வெள்ளை மகன்போல் விலாஇற நக்கீங்
கெள்ளினன் போமென் றெடுத்துரை செய்வோன்
ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்
காண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது
அறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்

நற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்
யாவரும் இல்லாத் தேவர்கள் னாட்டுக்
கிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே
வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்
திருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை

உண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ
பெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ,
யாவையீங் களிப்பன தேவர்கேரன் என்றலும்
புரப்போன் பாத்திரம் பொழிந்தூண் சுரந்தீங்
கிரப்போர்க் காணா தேமாந் திருப்ப,