பக்கம் எண் :187
Manimegalai-Book Content
14.
பாத்திர மரபு கூறிய காதை
55
60
65
70
75
80
நிரப்பின் றெய்திய நீணில மடங்கலும
பரப்பு நீரால் பல்வளம் சுரக்கென
ஆங்கவன் பொருட்டால் ஆயிரங் கண்ணோன்
ஓங்குயர் பெருஞ்சிறப் புலகோர்க் களித்தலும்
பன்னீ ராண்டு பாண்டிநன் னாடு
மன்னுயிர் மடிய மழைவள மிழந்தது
வசித்தொழில் உதவ மாநிலங் கொழுப்பப்
பசிப்புயிர் அறியாப் பான்மைத் தாகலின்
ஆருயி ரோம்புநன் அம்பலப் பீடிகை
ஊணொலி அரவம் ஒடுங்கிய தாகி
விடருந் தூர்த்தரும் விட்டேற் றாளரும்
நடவை மாக்களும் நகையொடு வைகி
வட்டுஞ் சூதும் வம்பக் கோட்டியும்
முட்டா வாழ்க்கை முறைமைய தாக
ஆபுத் திரன்தான் அம்பலம் நீங்கி
ஊரூர் தோறும் உண்போர் வினாஅய்
யாரிவன் என்றே யாவரும் இகழ்ந்தாங்
கருந்தே மாந்த ஆருயிர் முதல்வனே
இருந்தாய் நீயோ என்பார் இன்மையின்
திருவின் செல்வம் பெருங்கடல் கொள்ள
ஒருதனி வரூஉம் பெருமகன் போலத்
தானே தமியன் வருவோன் தன்முன்
மாநீர் வங்கம் வந்தோர் வணங்கிச்
சாவக நன்னாட்டுத் தண்பெயல் மறுத்தலின்,
ஊனுயிர் மடிந்த துரவோய் என்றலும்
அமரர்கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
குமரி மூத்தஎன் பாத்திரம் ஏந்தி
அங்கந் நாட்டுப் புகுவதென் கருத்தென
வங்க மாக்களொடு மகிழ்வுட னேறிக்
கால்விசை கடுகக் கடல்கலக் குறுதலின்
மாலிதை மணிபல் லவத்திடை வீழ்த்துத்
தங்கிய தொருநாள் தானாங் கிழிந்தனன்
இழிந்தோன் ஏறினன் என்றிதை எடுத்து
வழங்குநீர் வங்கம் வல்லிருள் போதலும்