உரை
1--2ஆங்கவற்கு
ஒரு நாள் அம்பலப் பீடிகைப் பூங்கொடி நல்லாய் புகுந்தது கேளாய்-அந்த ஆபுத்திரனுக்கு
அம்பலப்பீடிகையினிடம் ஒரு நாள் நேர்ந்ததைப் பூங்கொடியனைய நங்காய் கேட்பாயாக;
ஆங்கவன்: ஒரு சொல். நல்லா யென்றது மணிமேகலையை.
2--8. மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து-மழைத்துளிகளையுடைய இடையாமத்தில்
வலிய இருட்கலப்பிலே, ஆரிடை உழந்தோர் அம்பலம் மரீஇ - அரிய வழியில் வருந்தி
வந்தோர் சிலர் அம்பலத்தையடைந்து, துயில்லோன் தன்னைத் தொழுதனர் ஏத்தி
- உறங்கிக் கொண்டிருந்த ஆபுத்திரனை யெழுப்பி வணங்கித் துதித்து, வயிறுகாய்பெரும்பசி
மலைக்கும் என்றலும் - வயிற்றினைக் காய்கின்ற பெரும் பசியானது வருத்தும் என
உரைத்தலும், ஏற்றூண் அல்லது வேற்றூண் இல்லோன் - இரந்துண்ணும் உணவினையன்றி
வேறு உணவில்லாத ஆபுத்திரன், ஆற்றுவது காணான்
|