பக்கம் எண் :

பக்கம் எண் :189

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை

ஆரஞர் எய்த - உதவுதற்குரிய வழியைக் காணாதவனாய் மிக்க துயரத்தை அடைய

உழந்தோர் - கூத்தர் முதலியோர் என்றுரைப்பாரு முளர். வயிறு காய் பெரும்பசிக்கு முன் (11: 110) உரைத்தமை காண்க.

மலைக்கும் - மாறுபடுத்தும். நல்லிருளாகலின் ஆற்றுவது காணானாயினான்.

1--16.கேள் இது மாதோ கெடுக நின் தீது என - இதனைக் கேள் நின் துன்பம் கெடுக என்று, யாவரும் ஏத்தும் இருங்கலை நியமத்து - அனைவரும் துதிக்கும் பெரிய கலை
நியமத்தில் உள்ள, தேவி சிந்தா விளக்குத் தோன்றி - தேவியாகிய சிந்தாவிளக்குத் தோன்றி, ஏடா அழியல் எழுந்து இது கொள்ளாய் - ஏடா வருந்தாதோ எழுந்து இதனைப் பெறுவாய், நாடு வறங் கூரினும் இவ்வோடு வறம் கூராது - நாட்டின்கண் வற்கடம் மிகினும் இந்த ஓடானது வறுமையுறாது, வாங்குநர் கையகம் வருந்துதல்
அல்லது - உணவினை வாங்குவோர் கைகள் வருந்துதலன்றி, தான் தொலை வில்லாத் தன்மையது என்றே - தான் அழியாத தன்மையையுடைத்தாம் என்று, தன் கைப் பாத்திரம் அவன் கைக் கொடுத்தலும் - தன் கையிலுள்ள ஓட்டினை அவன் கையில் அளித்தலும்;

மாது, ஓ: அசைகள். யாவரும்-எச்சமயத்தாரும் என்றுமாம். கலை நியமம் - நாமகள் கோயில். ஏடா: விளி, வறம் - வற்கடம்; பஞ்சம்; 1"ஞாலம் வறந்தீரப் பெய்ய" என்றார் பிறரும். மிகுதியாக அளித்தலின் வாங்குவோர் கை வருந்து மென்றார் ; வருத்துதல் எனப்பாடங்கொள்ளலுமாம். தான் என்றது பாத்திரத்தை. வறங் கூராது - வறுமை யுறாது: முற்று; எச்சமுமாம்.

17--21. சிந்தாதேவி - மனத்தின்கண் அமர்ந்திருக்கின்ற மா தெய்வமே, செழுஙகலை நியமத்து - அழகிய கலைக்கோட்டத்தின்கண் மேவிய, நந்தா விளக்கே - அழியாத திருவிளக்கே, நாமிசைப் பாவாய் - நாவின்கண் பொருந்திய நங்கையே, வானோர் தலைவி - விண்ணவர் தலைவியே, மண்ணோர் முதல்வி - மண்ணுளளோர் முதல்வியே, ஏனோர் உற்ற இடர் களைவாய் என - ஏனையோரடைந்த துன்பத்தை நீக்குவோய் என்று, தான் தொழுது ஏத்தித் தலைவியை வணங்கி - அஞ்சலி செய்து துதித்துத் தலைவியை வணக்கஞ் செய்து ;,

அடுக்கிய விளிகள் சிந்தா தேவிபால் ஆபுத்திரனுக்குள்ள அன்பின் ஆராமையைப் புலப்படுத்துகின்றன.

22--9 ஆங்கவர் பசி தீர்த்து அந்நாள் தொட்டு-அவர்களுடைய பசியைத் தீர்த்துஅந்நாள் தொடங்கி, வாங்கு கை வருந்த மன்னுயிர்


1 கலி. 82.