பக்கம் எண் :

பக்கம் எண் :195

Manimegalai-Book Content
14. பாத்திர மரபு கூறிய காதை
 

என்று கூறி விடுத்து, ஆங்கு உண்ணா நோன்போடு உயிர் பதிப் பெயர்ப்புழி -அவ்விடத்தில் உண்ணா நோன்புடனிருந்து உயிர் விடும்பொழுது ;

ஓரியாண் டொருநாளென்றது வைகாசித் தூய நிறைமதி நாளை. அருளறம் - தயாதன்மம் பூண்டாங்கு ; ஆங்கு ; அசை. நோன்போடு - நோன்பால் என்றுமாம். திப்பெயர்ப்புழி-உடலினின்றும் நீக்குங்கால்.

96--104 அந்நாள் ஆங்கவன் தன்பாற் சென்றேன் என் உற்றனையோ என்று யான் கேட்ப-அந்நாளில் அவனிடம் சென்றயான் நீ எய்திய துன்பம் யாதென வினவலும், தன் உற்றன பல தான் எடுத்து உரைத்தனன்-தன்னை அடைந்த துன்பங்கள் பலவற்றையும் தான் எடுத்துக் கூறி, குணதிசைத் தோன்றிக் கார் ழித்து, குடதிசைச் சென்ற ஞாயிறுபோல-மேற்றிசையிற் சென்ற கதிரைஇருள் சீத்து - கீழ்த்திசையிலே தோன்றிக் கரிய இருளை அனப் போல, மணிபல்லவத்திடை மன்னுடம்பு இட்டுத் தணியா மன்னுயிர் தாங்கும் கருத்தொடு-நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கும் நீங்காத எண்ணத்துடன் மணிபல்லவத்தில் தன் உடலை இட்டு, சாவகம் ஆளும் தலைத்தாள் வேந்தன் ஆ வயிற்று உதித்தனன் ஆங்கவன் தான் என் - ஆபுத்திரன் சாவக நாட்டினை யாளும்மிக்க முயற்சியை யுடைய அரசனது ஆவின் வயிற்றில் உதித்தனன் என்க.

சென்றேன் யான் என்று கேட்ப எனக் கூட்டுக. யான் என்றது அறவணவடிகள். தாங்குங் கருத்தொடு உதித்தனன் என்றலுமாம் ; 1"உயிர் உடம்பின் நீங்குங் காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்குந் துணிபாகலின்" என்னும் பரிமேலழகர் உரை ஈண்டு அறியற்பாலது. தணியாக் கருத்தொடு என்க. பசு மண்முகன் என்னும் முனிவனுடைய தாயினும் பூமி சந்திரனது நாட்டகத்தது ஆகலின் ''வேந்தன் ஆ'' எனப்பட்டது. அவன் உரைத்தனன் உடம்பிட்டு உதித்தனன் என்றியையும்.

உழந்தோர் மலைக்குமென்றலும், இல்லோன் அஞரெய்த, சிந்தா விளக்குத் தோன்றிப் பாத்திரங் கொடுத்தலும், ஆபுத்திரன் ஓம்பலின் விடாவாய் ஒலிப்ப, இந்திரன் கொள்கென, உரைசெய்வோன், ''யாவை யீங்களிப்பன தேவர் கோன்'' என்றலும், ஆயிரங் கண்ணோன் உலகோர்க் களித்தலும், பாண்டி நன்னாடு பான்மைத் தாகலின், பீடிகை முறைமையதாக. ஆபுத்திரன் நீங்கி உண்போரை வினாவி, என்பார் இன்மையின் வருவோன் றன்முன், வந்தோர்
மடிந்தது என்றலும், வங்கமேறி இழிந்தனன் ; வங்கம் வல்லிருட் போதலும் துயரெய்தி விடுவோன் புகுவாய் என்று உயிர்பதிப் பெயர்ப்புழி, சென்றேன் கேட்ப, அவன் உரைத்தனன் ஆவயிற்றுதித்தனன் என வினைமுடிவு செய்க.

பாத்திரமரபு கூறிய காதை முற்றிற்று.


1 குறள். 358--உரை.