முதலில் ஏற்பது தகுதி,"யென்று சொல்ல, காய சண்டிகை, "மழை வளந் தரும் கற்புடைய
மாதர்களுள் மிக மேம்பட்டவளாகிய ஆதிரையின் மனை இது; நீ இதிற் புகவேண்டும்,"
என்று அவளுக்குக்கூறினள்.]
5
10
15
20
25
30
இன்னுங் கேளாய்
இளங்கொடி மாதே
அந்நாள் அவனை ஓம்பிய நல்லாத்
தண்ணென் சாவகத் தவள மால்வரை
மண்முகன் என்னும் மாமுனி இடவயின்
பொன்னின் கோட்டது பொற்குளம் புடையது
மழைவளஞ் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்
உயிர்கா வலன்வந் தொருவன் தோன்றும்
குடர்த்தொடர் மாலை பூண்பா னல்லன்
அடர்ப்பொன் முட்டை அகவையி னானெனப்
பிணிநோய் இன்றியும் பிறந்தறஞ் செய்ய
மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன்
தற்காத் தளித்த தகைஆ அதனை
ஒற்கா வுள்ளத் தொழியான் ஆதலின்
ஆங்கவ் வாவயிற் றமரர்கணம் உவப்பத்
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவினுக்
கொருதா னாகி உலகுதொழத் தோன்றினன்
பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள்நீ
இருதிள வேனிலில் எரிகதிர் இடபத்
தொருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின்
மீனத் திடைநிலை மீனத் தகவையின்
போதித் தலைவனொடு பொருந்திய போழ்தத்து
மண்ணக மெல்லாம் மாரி இன்றியும்
புண்ணிய நன்னீர் போதொடு சொரிந்தது
போதி மாதவன் பூமியில் தோன்றும்
கால மன்றியும் கண்டன சிறப்பெனச்