முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :198
Manimegalai-Book Content
15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை
35
40
45
50
55
60
65
மிக்க மாதவர் விரும்பினர் வியந்து
கந்துடை நெடுநிலைக் கடவுள் எழுதிய
அந்திற் பாவை அருளு மாயிடின்
அறிகுவம் என்றே செறியிருள் சேறலும
மணிபல் லவத்திடை மன்னுயிர் நீத்தோன்
தணியா உயிருயச் சாவகத் துதித்தனன்
ஆங்கவன் றன்திறம் அறவணன் அறியுமென்
றீங்கென் நாவை வருத்திய திதுகேள்
மண்ணாள் வேந்தன் மண்முகன் என்னும்
புண்ணிய முதல்வன் திருந்தடி வணங்கி
மக்களை யில்லேன் மாதவன் அருளால்
பெற்றேன் புதல்வனை என்றவன் வளர்ப்ப
அரைசாள் செல்வம் அவன்பால் உண்மையின்
நிரைதார் வேந்தன் ஆயினன் அவன்தான்
துறக்க வேந்தன் துய்ப்பிலன் கொல்லோ
அறக்கோல் வேந்தன் அருளிலன் கொல்லோ
சுரந்து காவிரி புரந்துநீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல்லுயிர்க் கெல்லாம
அலத்தற் காலை யாகிய தாயிழை
வெண்திரை தந்த வமுதை வானோர்
உண்டொழி மிச்சிலை யொழித் துவைத் தாங்கு
வறனோ டுலகின் வான்துயர் கெடுக்கும்
அறனோ டொழித்தல் ஆயிழை தகாதென
மாதவ னுரைத்தலும் மணிமே கலைதான்
தாயர் தம்மொடு தாழ்ந்துபல ஏத்திக்
கைக்கொண் டெடுத்த கடவுட் கடிஞையொடு
பிக்குணிக் கோலத்துப் பெருந்தெரு அடைதலும்
ஒலித்தொருங் கீண்டிய ஊர்க்குறு மாக்களும்
மெலித்துகு நெஞ்சின் விடருந் தூர்த்தரும்
கொடிக்கோ சம்பிக் கோமகன் ஆகிய
வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை
வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக் கொவ்வா உறுநோய் கண்டு
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்