பக்கம் எண் :

பக்கம் எண் :199

Manimegalai-Book Content
15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை






70





75





80





85
பரிவுறு மாக்களில் தாம்பரி வெய்தி
உதய குமரன் உளங்கொண் டொளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றிப்
பிச்சைப் பாத்திரங் கையினேந் தியது
திப்பியம் என்றே சிந்தைநோய் கூர

மணமனை மறுகின் மாதவி யீன்ற
அணிமலர்ப் பூங்கொம் பகமலி யுவகையில்
பத்தினிப் பெண்டிர் பண்புடன் இடூஉம்
பிச்சை யேற்றல் பெருந்தக வுடைத்தெனக்
குளனணி தாமரைக் கொழுமலர் நாப்பண்

ஒருதனி யோங்கிய திருமலர் போன்று
வான்தரு கற்பின் மனையுறை மகளிரில்
தான்தனி யோங்கிய தகைமையள் அன்றோ
ஆதிரை நல்லாள் அவள்மனை இம்மனை
நீபுகல் வேண்டும் நேரிழை என்றனள்

வடதிசை விஞ்சை மாநகர்த் தோன்றித்
தென்றிசைப் பொதியிலோர் சிற்றியாற் றடைகரை
மாதவன் தன்னால் வல்வினை யுருப்பச்
சாபம் பட்டுத் தனித்துயர் உறூஉம்
வீவில் வெம்பசி வேட்கையொடு திரிதரும்

காயசண் டிகையெனும் காரிகை தானென்.
உரை

1.இன்னும் கேளாய் இளங்கொடி மாதே-இளமை பொருந்தியகொடி போலும் மாதே இன்னும் யான் கூறுவதனைக் கேட்பாயாக ; இன்னும் - மற்றுமென்னும் பொருட்டு:

2--8.அந்நாள் அவனை ஓம்பிய நல்ஆ-சாலி யென்பாள் ஆபுத்திரனை ஈன்று போகட்டுச் சென்ற அந்நாளில் அவனைப் பாதுகாத்த நல்ல பசுவானது, தண்ணென் சாவகத் தவள மால்வரை - குளிர்ச்சி மிக்க சாவக நாட்டிலுள்ள பெரிய தவளமலைக் கண்ணே, மண் முகன் என்னும் மாமுனி இடவயின் - பெருமை பொருந்திய மண் முகன் என்னும் முனிவனிடத்தில், பொன்னின் கோட்டது பொற்குளம்பு உடையது - பொன்னாலாய கொம்பினையுடையதும் பொன்னாலாகிய குளம்பினையுடையதும் ஆகி, தன் நலம் பிறர் தொழத் தான் சென்று எய்தி-தனது நலத்தினைக் கண்டு பிறர் எல்லாம் வணங்கும்படி சென்று அடைந்து, ஈனா முன்னம் இன்