பக்கம் எண் :

பக்கம் எண் :200

Manimegalai-Book Content
15. பாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை

உயிர்க்கு எல்லாம் தான் முலை சுரந்து தன் பால் ஊட்டலும்-தான் ஈனுதற்கு முன்னமே மடி சுரந்து இனிய உயிர்கட்கெல்லாம் தனது பாலை உண்பித்தலும் ;

இடவயின் என்பதில் வயின் ஏழனுருபின் பொருட்டு. நலமாவது ஈண்டு அருள்

9--14. மூன்று காலமும் தோன்ற நன்கு உணர்ந்த ஆன்ற முனிவன்-முக்காலங்களையும் தெளிவுற நன்கறிந்த தவத்தான் அமைந்த மண்முக முனிவன், அதன் வயிற்று அகத்து-அப் பசுவினது வயிற்றின்கண், மழைவளம் சுரப்பவும் மன்னுயிர் ஓம்பவும்உயிர்காவலன் வந்து ஒருவன் தோன்றும் - மழைவளம் பெருகவும் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கவும் உயிர்களைக் காப்பவனாகிய ஒருவன் வந்து உதிப்பன், குடர்த்தொடர்மாலை பூண்பான் அல்லன் - அங்ஙனந் தோன்றுவோன் ஊனானாய குடர் மாலையைப் பூண்பானல்லன், அடர்ப்பொன் முட்டை அகவையினான் என - பொற்றகட்டினாகிய முட்டையின் உள்ளிடத்தானாவன் எனவுரைக்க ;

மூன்று காலம்-இறப்பு நிகழ்வு எதிர்வு; அவற்றில் நிகழ்வனவற்றை உணர்த்திற்று; 1'',மறுவில் செய்தி மூவகைக் காலமும், நெறியினாற்றிய வறிவன்" என ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலுங் காண்க. தோன்ற - விளங்க ; புலப்பட. உயிர் காவலன் ஒருவன் வந்து என மாறுக. குடர்த்தொடர்-குடரின் தொடர்ச்சி. அடர்-தகடு. அகவை - அடங்கியது ; உள்ளிடம். "குடர்த்தொடர் மாலை சூழா தாங்கோர், அடர்ப்பொன் முட்டையு ளடங்கிய வண்ணமும்" (25 : 72-3) என்பர் பின்னும்.

15--26. பெரியோன் பிறந்த பெற்றியைக் கேள் நீ-அப்பெரியோன் பிறந்த வியல்பினை நீ கேட்பாயாக, பிணிநோய் இன்றியும் பிறந்து அறம் செய்ய-பிணியானுண்டாகும் வருத்தம் இல்லாதிருக்கவும் மீண்டும் உலகின்கண்பிறந்து அறஞ்செய்தற்பொருட்டு,மணிபல்லவத்திடை மன்னுயிர் நீத்தோன் - மணிபல்லவ மென்னுந் தீவின்கண் தன் ஆருயிர் துறந்தவனாகிய ஆபுத்திரன், தற்காத்து அளித்த தகை ஆ அதனை-தன்னைப் பேணிப் பாதுகாத்த அழகிய பசுவினை, ஒற்கா உள்ளத்து ஒழியான் ஆதலின்-தளராத உள்ளத்தின்கண் நீங்காதவனாதலினால், ஆங்கு அவ் ஆ வயிற்று-அம் முனிவன் கூறியவாறே ஆண்டு அப் பசுவின் வயிற்றில், அமரர்கணம் உவப்ப-உம்பர் கூட்டம் உவகை எய்த, தீங்கனி நாவல் ஓங்கும் இத்தீவினுக்கு-இனிய பழங்களையுடைய நாவல் ஓங்கிய இம் மாபெருந் தீவிற்கு, ஒரு தான் ஆகி உலகு தொழத் தோன்றினன்-தான் ஒரு முதல்வனாய் உலகிலுள்ளோர் வணங்கும்படி பிறந்தனன், இருது


1 தொல். புறத். 20.